எதிர்வரும் நோன்புப் பெருநாளன்று காயல்பட்டினத்தில் மின் தடை செய்யாதிருக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காயல்பட்டினம் நகர அலுவலகத்தில், அதன் இளநிலை பொறியாளரிடம் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நோன்புப் பெருநாளை நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம். நமதூர் காயல்பட்டினம் பொதுமக்கள் பெருநாளுக்கு ஆயத்தமாகி வருவதையும், பெருநாள் கொண்டாட்டங்களையும் கருத்திற்கொண்டு, நகரில் மின்தடை செய்யாமல் பார்த்துக்கொள்ளக் கோரி - தமிழ்நாடு மின் வாரியத்தின் காயல்பட்டினம் கிளை இளநிலை பொறியாளர் முருகனிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, 23.06.2017. வெள்ளிக்கிழமையன்று நேரில் மனு அளிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 23, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|