நோன்புப் பெருநாளுக்கு சில நாட்களே எஞ்சியுள்ளது. பெருநாளுக்காக கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தியும் அல்லது விடுமுறை எடுத்தும் - பல்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் பணிபுரியும் காயலர்கள் பெருமளவில் ஊர் வந்துள்ளனர். இதன் காரணமாக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது இடநெருக்கடி காணப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் வழமையாக கீழ் தளம் முழுவதும் நிறைந்து, மேல் தளத்தில் முக்கால் பகுதியும் நிறைந்திருக்கும். ஆனால், இன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் இரு தளங்களிலும் மக்கள் நிறைந்து, வெளிப்பள்ளியிலும் நிறைந்து, பள்ளியையொட்டிய சாலையிலும் 3 வரிசைகள் வரை நின்று தொழுதனர்.
வழமையாக பள்ளி பாட வேளை முடிந்ததும், அவ்வழியே கடந்து செல்லும் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர், இந்த திடீர் ஏற்பாடு காரணமாக, மாற்று வழியில் கடந்து சென்றனர்.
விரிவாக்கிக் கட்டப்பட்டுள்ள அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பெருமளவுக்கு கூட்டம் நிறைந்தே காணப்பட்டது.
|