செளதி அரேபியா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 38-வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் :-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 38-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 09.06.2017 ரமலான் பிறை 14 வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணியளவில் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள “ஆர்யாஸ்” உணவகத்தில் வைத்து நடந்தேறியது.
இஃப்தார் நோன்பு துறப்பு:
காயலின் சுவைமிகு கறிகஞ்சி, பழங்கள் மற்றும் பொரியல்களுடன் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் புனித ரமலான் நோன்பு திறந்து வல்லோன் இறைவனை போற்றி புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தபட்டது. தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு, அதே கட்டிடத்தின் மாடியில் அமையப்பெற்ற தொழும் இடத்தில் கூட்டாக நிறைவேற்றி வந்த பின்னர் தேநீர் பரிமாறப்பட்டு பிறகு கூட்டம் இனிதே ஆரம்பமானது.
இக்கூட்டதிற்கு துபாயில் இருந்து வந்து கலந்துகொண்ட இம்மன்றத்தின் ஆலோசகர் சகோ.எம்.எம். மூஸா சாஹிப் தலைமை ஏற்று நடாத்த, சகோ. பொறியாளர் லண்டன் அபூபக்கர், சகோ.குளம்.எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன், சகோ. மருத்துவர் எம்.ஏ. முஹம்மது ஜியாத், சகோ. கீழக்கரை சீனி அலி, சகோ. கலவா எம்.ஏ.செய்து இபுராஹிம், ஆகியோர்கள் முன்னிலை வகிக்க சகோ. அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஐப் கிராத் ஓதி துவக்க, வந்திருந்த அனைவரையும் சகோ. ஒய்.எம். முஹம்மது ஸாலிஹ் அகமகிழ வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
இஸ்லாமிய பாடல்:
தனது இனிய குரலால் நல்ல அழகிய இஸ்லாமிய பாடல் ஒன்றை பாடி வந்திருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தினர் சகோ. எப். யாகூத்.
தலைவர் உரை:
இந்த கூடத்திற்கு அப்ஹா, ஜிஜான், மக்கா மற்றும் யான்பு என பல இடங்களில் இருந்தும், வேலை பளுவிற்கு மத்தியில் வந்து ஆர்வத்தோடு நாம் எல்லோரும் இங்கு ஒன்று கூடிவுள்ளோம் என்றால், நம் மக்களுக்கு நல்லது செய்யணும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கலந்துள்ளோம். நம் மன்றத்தின் பல நல்ல நோக்கங்கள் இறையருளால் இனிதே நிறைவு பெற்று வருவதும், வழமையான உதவிகள் அல்லாது இன்னும் பல உதவிகளை நம் மன்றம் செய்து வருவதும், நம் மன்ற உறுப்பினர்கள் செலுத்தி வரும் சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டு நம் ஊரில் தேவையுடயவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வகைகளுக்கு வழங்கி வருகின்றோம். நாம் செய்யும் இந்த நல்லபணி எல்லா மன்றங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆகவே உங்களின் தாராள நிதி உதவியால் இந்த மன்றம் இன்னும் தொடர்ந்து தோய்வில்லாமல் நல்ல பணி செய்திட உங்களின் நல் ஆதரவு தேவை என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார். தலைமை பொறுப்பு வகித்த சகோ. எம்.எம். மூஸா சாஹிப்.
மேலும் இந்த புனிதமிகு ரமலானில் நம் மன்ற உறுப்பினர்கள் சதக்கா, ஜகாத் தர்மங்களை வழங்கிடுமாறும் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக என்றும் மன்றப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து விபரமாக எடுத்துச் சொன்னார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள் மற்றும் மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள், ஷிபா மருத்துவ அமைப்பு மற்றும் இக்ரா கல்வி சங்கம், இது சம்பந்தமான இதர தகவல்களை விபரமாக தெரிய தந்தும், நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு இரு பெருநாள்கள்களின் சிறப்பு ஊக்க உதவியளிக்கும் திட்டத்திற்காக வேண்டி முன்னேற்பாடு செய்யவும் கருத்துக்களை பகிரவும் வேண்டி கடந்த இரு மாதத்திற்கு முன்னர் உலக அனைத்து காயல் நல மன்றங்களின் நிர்வாகிகளை ஒன்றிணைத்து தற்காலிகமாக உருவாக்கப்பட வாட்ஸ் அப் குழுமத்தில் பகிரப்பட்ட செய்திகளும் அதன் முழு விபரங்களையும் அனைவருக்கும் விளக்கமாக தெரியபடுத்தியதுடன் இந்த இமாம் முஅத்தின் அவர்களுக்கு நாம் கடந்த ஆண்டுகளில் உதவிய பொழுது அதனை அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமயம் அவர்கள் அனைவரும் மன நெகிழ்ச்சியுடன் பெற்றும் இதற்காக உதவிய, உழைத்த நல்லுள்ளங்களுக்கு நாயன் அல்லாஹ்விடம் நெஞ்சுருக பிரார்த்தித்த நல்ல செய்தியையும் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் எடுத்துரைத்தார்.
நிதி நிலை:
கடந்த செயற்குழு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கிடு செய்தது, சந்தா மற்றும் நன்கொடைகளின் தற்போதைய வரவு மற்றும் இருப்பு விபரங்களை கூறியதுடன், மன்றம் ஆரம்பித்து இதுவரையில் இந்த மன்றம் நம் மக்களுக்கு வழங்கிய மொத்த தொகையின் விபரம், மேலும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு கடந்த வருடங்களில் வழங்கிய தொகை என்று பட்டியலிட்டு விபரமாக மன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
சிறப்பு விருந்தினர்களின் கருத்துரை:
உங்களை எல்லாம் ஒரே இடத்தில் இங்கு பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. நம் ஊருக்காக நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்து சேவையாற்றுவது பெருமித மாகவும், பாராட்டுக்குரியதாகவும் உள்ளது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும். நானும் ஆரம்ப காலத்தில் இங்கு இருந்தவன்தான் ஆனால் அப்போதெல்லாம் இது போன்று பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. எனவே உங்கள் யாவருக்கும் நீண்ட ஆயுளை தந்து, செல்வத்தையும் தந்து, ஊருக்காக நல்ல பணிகள் செய்திட அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். என்ற பிராத்தனையுடன், நிறைவு செய்தார்கள் கண்ணியத்துக்குரிய சகோ. பொறியாளர் லண்டன் அபூபக்கர் அவர்கள்.
ஜிஜானில் இருந்து வருகை தந்த சகோ. பேராசியர் தமீமுல் அன்சாரி பேசும்போது, எனக்கு இங்கு வந்து கலந்து கொள்வதை பார்க்கும்போது போது ஊரில் இருக்கும் உணர்வு வருகிறது. பல வகையிலும் நீங்கள் பல சேவைகள் செய்வது வருவது மிக சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் அந்த உதவி சரியாக கடைசிவரைக்கும் போய் சேர்கிறதா என்பதில் கவனம் தேவை. மேலும் நம் பிள்ளைகள் சரியான பாதைகளின் செல்கிறார்களா, அவர்களின் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே பிள்ளைகளின் மேல் அதிக கவனம் செலுத்தி, நல்ல ஒழுக்கம் நிறைந்த மக்களாக நாம் அவர்களை ஆளாக்குவோம். பல கஷ்ட நஷ்டங்களை புரிந்துணர்ந்து வளர்பவன் நாளை சிறந்து விளங்குவான். என்ற நல்ல கருத்துக்களை இங்கு பதிவு செய்து அமர்ந்தார்.
புனித உம்ரா கடமையை நிறைவேற்ற புனித மக்கா வந்ததில் சிறப்பு விருந்தினராக ரியாத் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ.எம்.ஈ.எல். செய்யிது அஹ்மது நுஸ்கி கலந்து கொண்டு, நல்ல பல கருத்துக்களை தந்து, நம் ஊருக்காக நாம் ஒன்று கூடி சேவை செய்வது ஒரு மகத்தான பணியாகும் அதனை நாம் எல்லோரும் இணைந்து தொடர்ந்து செய்வதால் வல்ல இறைவன் நமக்கு பல நன்மைகளை ஈருலகிலும் வழங்குவான். என்று துஆ செய்து அமர்ந்தார்.
கீழக்கரை சகோ. சீனி அலி அவர்கள் தனதுரையில், ஜித்தா காயல் நல மன்ற கூட்டம் என்று என்னை அழைத்தார்கள். பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்திருக்கும் உங்களை பார்க்கும்போது இது ஜித்தா கூட்டமா இல்லை சவூதி அரேபியா கூட்டமா என்று என்னை வியக்க வைக்கின்றது. அந்த அளவிற்கு மிக ஆர்வமுடன் காயல் மக்களுக்கு நல்லது செய்யணும் என்று இங்கே கூடி இருக்கிறீர்கள் சந்தோசமாக உள்ளது. என்று மன்றத்தின் சேவை உணர்வை வியப்புடன் கூறி அமர்ந்து கொண்டார்.
அத்துடன் யான்பு துணைச்செயலாளர் சகோ.கலவா.எம்.ஏ.செய்து இப்ராஹிம் மற்றும் துணைத்தலைவர் சகோ.மருத்துவர்.எம்.ஏ.முஹம்மது ஜியாது ஆகியோரும் தங்களது கருத்துக்களை சுருக்கமாக கூறி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார்கள்.
அதனை தொடர்ந்து, மன்றச் செயலாளர் சகோ. எம்.ஏ.செய்து இபுராஹீம், இங்கே கருத்துரை வழங்கிய அருமை சகோதரர்களின் கருத்துக்கள் மிக அருமையாக இருந்தது.
அதிலும் குறிப்பாக சகோ. தமீமுல் அன்சாரி இன்றைய இளைனர்களின் வளர்ப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் கல்விமுறை புரிதலோடு இருக்க வேண்டும், என்ற நல்ல பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்தார். இந்த புனித ரமலான் மாதத்திலே நாம் சதக்கா, ஜகாத் போன்ற தானதருமங்கள் செய்து, அல்லாஹுவின் திருபொறுத்தத்தை அடைய இது நமக்கெல்லாம் ஒரு சிறந்த மாதம். இந்த புனிதமான ரமலான் மாதத்திலே உங்களின் நிதிகளை தந்து அல்லாஹ்வின் அருளை பெற்றிடுங்கள்.
என்ற ரமலானின் சிறப்புக்களை எடுத்துக்கூறி, தனிப்பட்ட முறையில் நாம் இவ்வளவு பெரியதாக செய்ய முடியாது, அல்லாஹ் நமக்கு வழங்கிய பரக்கத்தை கொண்டு தேவையுடயவர்களுக்கு உதவுவதால் நிச்சயமாக நாம் நல்ல நிலையில் இருப்போம். என்றும் மன்ற பணிகளையும் கோடிட்டுக்காட்டி தனதுரையை நிறைவு செய்தார்.
பிரார்த்தனை:
புண்ணியமிகுந்த இந்த ரமலான் மாதத்தில் உயர்ந்த எண்ணத்தோடும் வல்லவனின் அருள்நாடியும் பல பணிகளுக்கு மத்தியில் நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நம்மை இங்கு ஒன்று கூட்டி உயர்வான நோக்கத்தில் சந்திக்க வைத்த வல்லோன் அல்லாஹ்வை போற்றி புகழும் இந்நேரத்தில் இச்சிறப்பான சங்கை மிகுந்த மாதத்தில் நம் மன்றத்தின் அனைத்து நற்பணிகளையும், நம்முடைய நல்லமல்களையும் வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும், பிணியுற்றோர் சுகம் பெறவும், வறியோர்கள் வளம் பெறவும், நோய் நொடியற்ற தூய்மையான ஊராக நம் நகர் அமைந்திடவும், இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை பெற்றிடவும், ஏகன் இறையோனிடம் நாம் இருகரம் ஏந்தி துஆ செய்வோம், என்று கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
நம் காயல் நகரில் உள்ள அனைத்து இறை இல்லங்களில் இறை பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு தாய்லாந்து காயல் நல மன்ற வழிகாட்டல்படி அளிக்கப்படும் இரு பெருநாள்கள்களின் சிறப்பு ஊக்க உதவியில் நம் மன்றத்தின் பெரும் பங்களிப்பாக மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக அளித்த பெரும் நிதியில் இருந்து இவ்வாண்டும் மன்றம் மூலம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இதற்காக வந்திருந்தவர்களிடம் விபரம்மாக எடுத்துரைததிடவும் தொடர்ந்து ஒரு சிறு துண்டு காகிதம் கையளிக்க அதில் அவர்கள் தங்கள் பெயர் மற்றும் வழங்கப்படும்
தொகையனையும் எழுதிய பின்னர் பொருளாளரிடம் கொடுத்து கொண்டார்கள். அடுத்து அவைகளை எல்லாம் கூட்டி கணக்கிட பெருந்தொகை சேர்ந்தது வெறும் இருபதே நிமிட இடைவெளியில் இத்தொகை சேர்ந்தது பெரும் மகிழ்ச்சியளித்தது.மாஷா அல்லாஹ்.
நம் மன்றத்தின் 104-ஆவது செயற்க்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் ு எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி வழமையான ஜித்தா ஷரபிய்யா இம்பால கார்டனில் இரவு 7-30 முதல் 9-30 வரை நடைபெறும.
நன்றி உரை:
இனிய இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தவர்கள் அபுஹா, ஜிஜான், ரியாத், யான்பு,தமாம் மற்றும் மக்காவிலிருந்து வந்திருந்த உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், அனுசரணை வழங்கிய மன்றத்தலைவர் சகோ. குளம். எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன் ஆகிய யாவருக்கும் சகோ. சோல்ஜர் எஸ்.டி. செய்கு அப்துல்லாஹ்
மனப்பூர்வமான நன்றிகளை கூறினார். சகோ. மௌலவி அல்ஹாஜ் பிரபு பி.எஸ். செய்யது முஹிய்யத்தீன் ஆலிம் ஜலாலிி அவர்கள் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இறையருளால் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வின் இறுதி வரை கலந்து கொண்ட அனைவருக்கும்,காயல் நெய்ச்சோருடன் கோழிக்கறி அகனி மற்றும் சம்பலுடன் சகர் நேர உணவிற்காக, பொதியாக விநியோகிக்கப்பட்டது.
சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் முழு அனுசரணையில் நடந்தேறியது. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை சகோ சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி, சகோ. பொறியாளர் சட்னி. எஸ்.எம். செய்கு அப்துல்காதர் ஆகியோர் நல்லமுறையில் செய்திருந்தார்கள்.
செய்தியாக்கம்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
புகைப்படங்கள்:
அரபி எம்.ஐ.முஹம்மது சுஹைப்.
கே.ஏ.முஹம்மது நூஹ்.
அல்ஹாபிழ, பொறியாளர் , எம்.எச்.முஹம்மது அலி
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
16.06.2017.
|