சந்திரனின் அனைத்து வடிவ நிலைகளைக் கவனித்து, துல்லியமான பிறை கணக்கின் அடிப்படையில் குறித்த நாளில் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஹிஜ்ரீ கமிட்டி அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பெருநாள் தொழுகை குறித்த அறிவிப்பும் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
2. Re:...எல்லோரும் குறைஷிகளே... posted bymackie noohuthambi (kayalpatnam )[22 June 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45614
ஒரு மார்க்க அறிஞரை சந்தித்து ஒரு கேள்வி கேட்டேன். நபியவர்களும் அபூ லஹபும் அபூ ஜஹ்லும் எப்படி சொந்தம் என்றேன். மூன்று பேருமே குறைஷிகள் . நெருங்கிய கொஞ்சம் தூரத்து சொந்தம் என்றார்கள். ஆனால் அவர்கள் கொள்கைகள் எப்படி வேறாக இருந்தது என்று சிந்தித்து பார்த்தேன். அரபகத்தை விடுங்கள் நமது தமிழகத்தில் கட்டபொம்மன் எட்டப்பன் விஜயரகுநாத தொண்டமான் இவர்கள் எல்லோருமே பாண்டியர்கள் என்று வரலாறு சொல்கிறது அவர்களுக்குள் ஏன் இப்படி காட்டிக் கொடுக்கும் தன்மையும் கருத்து வேறுபாடுகளும் வந்தன என்று சிந்தித்து பார்த்தேன்.
திருமறையை ஓதும் போது அதிலே ஒரு செய்தி வருகிறது. இந்த குர் ஆன் நிறையபேரை வழி கெடுக்கும் நிறையபேருக்கு வழி காட்டும் .YULILLU BIHEE KATHEERAN VA YAHDHEE BIHEE KATHEERAA மிர்சா குலாம் அவர்களின் காதியானி அமைப்புக்கு கூட இஸ்லாமிய உலமாக்கள் தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கு அருகில் உள்ள மேலப்பாளையத்திலிருந்து வருகிறது.அப்படியானால் நாம் இப்படி பிரிந்து நிற்பதற்கும் அதற்கு தலைமை தங்குவதற்கும் அல்லாஹ் உலமாக்களையே காரணிகளாக்கி வைத்திருக்கிறான். இந்த பிரிவினை அல்லாஹ்வின் ஏற்பாடுதான் என்று மனம் நிம்மதி அடைந்தேன்.
அல்லாஹ் நமது உலமாக்களை ஹிதாயத்தை கொடுப்பானாக.
நபியே நீங்கள் சொல்லுங்கள். அவரவர்கள் செல்வதுதான் நேர்வழி என்று அவர்கள் நினைத்து செயல்படுகிறார்கள். யார் நேர் வழியில் இருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான் என்று மற்றுமொரு இறை வசனம் கூறுகிறது.
எனவே ஹிஜ்ரா நோன்பு சர்வதேச நோன்பு சுன்னத் ஜமாஅத் நோன்பு அவர்கள் தனித்தனியாக பெருநாள் கொண்டாடுவது எல்லாம் குளிர்விட்டுப்போன பழங்கதை ஆகி விட்டது...
LAA THOWFEEQA ILLAA BILLAAH..
ALLAAHU AKBAR KABEERAA VAL HAMDHU LILLAAHI KATHEERAA ....
3. Re:... posted byAbdul Wahid S. (Kayalpatnam)[24 June 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45619
நினைவு தெரிந்த நாளிலிருந்து 15-20 வருடத்திற்கு முன்பு வரை நமதூரின் அப்போதைய ஆலிம் பெருந்தகைகள் இலங்கை பிறைத்தகவலை மையமாகக்கொண்டு இபாதத்களை (நோன்பு, இருபெருநாட்களையும்) அமைத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று காரணம் சொல்லப்படாமல் இலங்கை பிறைத் தகவல் நிராகரிக்கப்படுவதை தற்கால ஆலிம்களிடம் ஏன் என்று கேள்வி கேட்க மூத்த சகோதரர் மக்கி நூகுத்தம்பி அவர்களுக்கு மனமில்லையா அல்லது துணிச்சல் இல்லையா?
சூரியனும் சந்திரனும் ஒரு கணக்கின்படி இயங்குவதாகவும் (55:5) அவைகள் மக்களுக்கு காலத்தை காட்டுவதாகவும் (6:96) அந்த காலக்கணக்கை மக்கள் அறிந்துகொள்ள முடியமென்றும் (10:5) அதற்காகவே சந்திரனுக்கு பல படித்தரங்களை (2:189) (மன்ஜில்களை) அல்லாஹ் அமைத்திருப்பதாக திருமறைக் குர்ஆன் கூறுவதை இங்கு அவருக்கு நினைவூட்டுவது மிகையாகாது என்று கருதுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross