சஊதி அரபிய்யா – ரியாத் அஸ்ஹர் ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அரும்பெரும் கிருபையினால் சவுதி அரேபியா ரியாத்திலுள்ள காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் கலந்தாலோசனைக் கூட்டம் 07/06/2017 புதன்கிழமை கிழமையன்று இந்த புனித ரமழான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் லீராயல் ஹோட்டலில் ( மலாஸ், ரியாத்)வைத்து சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
இந்த நிகழ்ச்சியை சகோதரர் ஹைதர் அலீ அவர்கள் நெறி படுத்தினார்கள். இளவல் அப்துர் ராஸிக் (சகோ. அபூபக்கர் அவர்களின் மகனார்) அவர்களின் இறைமறை வசனத்துடன் கூட்டம் ஆரம்பமானது.
சகோ. அபுல் ஹஸன் அவர்கள் அனைவர்களையும் அகமகிழ்வோடு வரவேற்று பேசினார். சகோதரர் சித்திக் அவர்கள் நன்மையான காரியங்களில் ரியாத் சகோதரர்களின் பங்களிப்பும், வருங்காலத்தின் தேவையும், அதிகப்படுத்தலின் வழிமுறைபற்றியும் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து சகோதரர் மௌலவி நூஹ் அல்தாபி அவர்கள் ரமழானின் சிறப்பு பற்றி மிக அழகான முறையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள்.
ஸஹாபா பெருமக்கள் சதக்கா மற்றும் ஜகாத்தில் மேலோங்கி இருந்ததை பற்றியும் விளக்கினார்கள். சதக்கா மற்றும் ஜகாத்தை காலம் தாழ்த்தாமல் முறையாக செய்து விட வேண்டும் என்று ஹதீஸ் அடிப்படையில் விளக்கினார்.
அடுத்து சகோதரர் ஹைதர் அலீ அவர்கள் கல்லூரியின் தற்போதைய தேவைகளை விளக்கி , அத்தகைய தேவைகளை பூர்த்தி செய்வது சதக்கத்துல் ஜாரியா நன்மை என்றும் வழியுறுத்தி பேசினார்.
இறுதியாக கஃபாராவுடன் கூட்டம் நிறைவு பெற்றது. பின்னர் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைவருக்கும் கஞ்சி, பேரீத்தம்பழம், பழ வகைகள், வடை வகைகள், குளிர்பான வகைகள் பரிமாறப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஊதி அரபிய்யா – ரியாதிலிருந்து...
தகவல் & படங்கள்:
அபூபக்கர் ஸித்தீக்
|