காயல்பட்டினம் கடைப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதம் கடைசிப் பத்து நாட்களில் ஒருநாள் சிறப்பு இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி, ரமழான் 27ஆம் நாளன்று (23.06.2017. வெள்ளிக்கிழமை) பள்ளி வெளி மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் துவங்கிய இஃப்தார் நிகழ்வில் அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், பழ வகைகள், பிரியாணி கஞ்சி, வடை வகைகள், கடற்பாசி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகி எஸ்.என்.முஹம்மத் அலீ தலைமையில் – ஜமாஅத் நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்திருந்தனர்.
|