சஊதி அரபிய்யாவில் நேற்று (ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள தம்மாம் நகரின், மன்னர் அப்துல் அஜீஸ் துறைமுக பகுதியில் அமைந்துள்ள - குளோப் கேம்ப் (Globe Camp) திடலில் நடைபெற்ற பெருநாள் தொழுகை & தமிழ் குத்பா பேருரையில் காயலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அதிகாலை 05:45 மணிக்கு நடைபெற்ற பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், வளாகத்தில் காயலர்கள் பலரும் ஒன்றுகூடி, கட்டித்தழுவி, கைலாகு (முஸாஃபஹா) செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
ரியாத் & ஜித்தாவிலிருந்து பெருநாள் விடுமுறையைக்காக தம்மாம் வருகை தந்த காயலர்களும், ஒன்றுகூடலில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒன்றுகூடல் காட்சிகள் வருமாறு:-
நிழற்பட செருகேடு
பெருநாள் தினத்தன்று எடுக்கப்பட்ட நிழற்படங்களை - தனி உயர்தெளிவான படங்களாக பதிவிறக்கம் செய்திட https://www.irista.com/gallery/5yty91zvvm6z என்ற இணையதள பக்கத்தைச் சொடுக்குக!
தகவல் & படங்கள்:
சஊதி அரபிய்யா - தம்மாமிலிருந்து...
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1437) தம்மாம் காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|