ஐக்கிய அரபு அமீரகத்தில், 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அன்று காலை 08.00 மணியளவில், துபை இடீஏ டி-ப்ளாக்கில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.ஸுலைமான் லெப்பை மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார்.







இதில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காயலர்கள் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும் அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
ஸர்ஃபராஸ்
முஹம்மத் ஃபஹ்மீ |