கடந்த ரமழான் – நோன்பு மாதத்தை முன்னிட்டு, வீடுகளில் ஸஹர் உணவு சாப்பிட வழியில்லாத ஏழை நோன்பாளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் – காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளி அருகில் - நகரின் சமூக ஆர்வலர்களால் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரமழான் நிறைவு நாளன்று நள்ளிரவில் காயல்பட்டினத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த – ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம், ஸஹர் உணவு பரிமாறும் இடத்திற்கு வந்து விபரம் கேட்டார். அவருக்குத் தெரிவிக்கப்பட்ட விபரங்களையடுத்து ஆர்வமுற்ற அவர், உணவுப் பாத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, தன் கைகளாலேயே அனைத்து நோன்பாளிகளுக்கும் உணவு பரிமாறினார்.
காவல் ஆய்வாளரின் தன்னார்வத்துடன் கூடிய இச்செயலைக் கண்டு அங்கிருந்தோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். |