காயல்பட்டினத்தில் 26.06.2017. திங்கட்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அன்று காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை வெவ்வேறு நேரங்களில் – நகரின் சுமார் பெரும்பாலான பள்ளிவாசல்களிலும், சுமார் 60 பெண்கள் தைக்காக்களிலும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியில், அதன் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
பெருநாள் தொழுகைக்குப் பின் அப்பள்ளி ஜமாஅத்தினர் ஒன்றுகூடி தமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியில், அதன் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ பெருநாள் தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார். குருவித்துறைப் பள்ளியில் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ தொழுகையை வழிநடத்த, மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ குத்பா உரையாற்றினார்.
மரைக்கார் பள்ளியில் அதன் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தினார். பின்னர், பள்ளி ஊழியர் நல நிதியாக 26 ஆயிரத்து 500 ரூபாய் சேகரமானது.
பெருநாள் தொழுகைக்குப் பின் அப்பள்ளி ஜமாஅத்தினர் ஒன்றுகூடி தமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
‘நெட்காம்’ புகாரீ (மரைக்கார் பள்ளி)
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (பெரிய குத்பா பள்ளி)
|