தெற்கு ஆத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் ஜாபிர் அலீ (23). இவர் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக உள்ளார். நோன்புப் பெருநாளுக்காக சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த இவர், 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று இரவு காயல்பட்டினத்தில் உள்ள உறவினரைப் பார்க்க தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
சாகுபுரம் பாலத்தைக் கடந்து சென்றபோது, எதிரே டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. அதன் டேங்கர் மேல் மூடி திறந்து அதன் வழியாக அமிலம் வெளியே சிதறியுள்ளது. அது ஜாபிர் அலீ மீது விழுந்ததால் அவரது கண்ணம், மார்பு, இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவ்விபத்து பற்றி ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, டேங்கர் லாரியின் டிரைவர் முருகன், கிளீனர் உத்திரகுமார் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்:
ச.பார்த்திபன்
|