திருச்செந்தூரை அடுத்துள்ள மணப்பாடு சுற்றுலாத் தலமாகும். இங்கு காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தம் குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவது வழக்கம். அவ்வாறான தருணங்களில் சிலர் அங்குள்ள கடலில் குளிக்கச் சென்று, உயிரை இழக்கும் நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டன.
கடைசியாக, 26.06.2017. திங்கட்கிழமை – நோன்புப் பெருநாளன்று காயல்பட்டினத்தைச் சேர்ந்த உடன்பிறந்த இரண்டு சகோதரர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இவற்றைக் கருத்திற்கொண்டு, இனி வருங்காலங்களில் தமது ஊருக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதிய – மணப்பாட்டைச் சேர்ந்த மீனவ இளைஞர்கள், தம் சொந்த ஏற்பாட்டில் கடலில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
|