தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதையடுத்து, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 24.06.2017. சனிக்கிழமையன்று 18.00 மணியளவில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்களான பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, பீ.எஸ்.எம்.இல்யாஸ், ஹாமித் அன்ஸாரீ ஆகியோர் முன்னிலை வகிக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் – தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு வான வேடிக்கை, மேள தாள முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரம்ஜான் நோன்பு காலத்தில் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் இன்றைய சூழலில் தமிழகத்தின் அவல நிலையை கருத்தில் கொண்டும், அதில் இருந்து மாநிலத்தை மீட்கவும் வேண்டுதல் செய்ய வேண்டும். மதவாத கொள்கைகளை திணிப்பதன் மூலம் இந்தியாவில் மதசார்பற்ற தன்மைக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளரை அ.தி.மு.க.வின் 3 அணிகளுமே போட்டி போட்டுக் கொண்டு ஆதரிக்கின்றன. இதன் மூலம் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது. இப்படிப்பட்ட அ.தி.மு.க.வை வீழ்த்திவிட்டு, சிறுபான்மை சமூகங்களுக்கு பாதுகாப்பான நல்லரசு தமிழகத்தில் மலர வேண்டும். இதற்காக இந்த நன்னாளில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் இஃப்தார் – நோன்பு துறக்கும் நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், கஞ்சி, குளிர்பானங்கள், வடை வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலாளர் உமரிசங்கர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் காதர், ராமநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி, தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர்கள் பென்னி, கருணாகரன், மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், உடன்குடி பாலசிங், நகர செயலாளர்கள் ஆறுமுகநேரி ராஜசேகர், திருச்செந்தூர் மந்திர மூர்த்தி, மேலாத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சதீஷ்குமார்,
காயல்பட்டினம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் காதர், ஜலீல், காதர் சாகிபு, மொகுதூம், உடந்தை மகராஜன், மாதவன், கதிரவன், காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான். முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், துணை செயலாளர் அப்துல் வாஹித் உள்பட திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காயல்பட்டினம் தி.மு.க. பிரமுகர் கே.ஏ.எஸ். முத்து, நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஓடை ஆர்.சுகு ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல்:
ச.பார்த்திபன்
படங்கள்:
இளையபெருமாள்
ஜெஸ்மின் பாஸ்கர்
|