காயல்பட்டினத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் மாத இரவுகளில் தராவீஹ் - சிறப்புத் தொழுகையின்போது திருமறை குர்ஆனின் வசனங்கள் பகுதி பகுதியாக ஓதப்பட்டு, ரமழான் 27 அல்லது 29ஆம் நாளில் முழு குர்ஆனும் ஓதி தமாம் (பூர்த்தி) செய்யப்படும்.
இந்த தமாம் நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பள்ளிகளில் அடுத்தடுத்த நாட்களில் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு தயாரிக்கப்பட்டு, ஸஹர் - நோன்பு நோற்பு உணவாக அந்தந்த ஜமாஅத் மஹல்லாவாசிகளுக்கு விருந்துபசரிப்பு செய்யப்படும். இந்நிகழ்ச்சி, நள்ளிரவு 02.30 மணி துவங்கி, 04.00 மணி வரை நடைபெறும்.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு, இன்று நள்ளிரவு 02.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, பெரிய - சிறிய குத்பா பள்ளிகள், இரட்டை குளத்துப் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் தமாம் சாப்பாடு அந்தந்த மஹல்லா ஜமாஅத்தினருக்கு பரிமாறப்பட்டது.
குருவித்துறைப் பள்ளியில் தமாம் சாப்பாடு விருந்துபசரிப்பு நடைபெற்றபோது...
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 19:45 / 25.06.2017.] |