உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நோன்பு, பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் பட்கல் என்ற ஊரிலும், சஊதி அரபிய்யாவிலும் ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று பெருநாள் இரவு என்றும், நாளை (ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பை, அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, இன்று 21.45 மணியளவில் வெளியிட்டார்.
பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை (25.06.2017. ஞாயிற்றுக்கிழமை) காலை 07.30 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்படவுள்ளது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தவுள்ளார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா உரையாற்றவுள்ளார்.
தொழுகைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இயன்றளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனினும், நீங்கள் வரும்போது தொழுவதற்கான விரிப்புகளைக் கொண்டு வந்து ஒத்துழைக்குமாறு அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
M.K.ஜஃபருல்லாஹ் & M.A.உமர் அப்துல் லத்தீஃப்
|