காயல்பட்டினத்தில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டும் இளைஞர்களின் விழிப்புணர்வுக்காக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் வெளியிடப்பட்ட சிறுகதை மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இரு சக்கர வாகனங்களை - குறிப்பாக இளைஞர்கள் - வேகமாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. இப்பிரச்னையுடன் - உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது; மூன்று நபர்களுடன் வாகனங்கள் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற பிரச்சனைகளும் உண்டு.
சமீப காலங்களில் - காயல்பட்டினம் உட்பட மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் - நோன்பு மாத இரவுகளில், இளைஞர்களுக்கிடையே வேகமாக வாகனங்கள் ஓட்டும் போட்டிகளும் நடைபெறுகிறது. இதனால் ஏற்படும் விபத்துகளால், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
இது போன்ற சம்பவங்கள் காயல்பட்டினத்தில் நடைபெறாமல் இருக்க - பெற்றோர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் - கடந்த ஆண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடப்பது என்ன? குழுமம் நடத்தியது.
இது குறித்து கண்காணிக்க - காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளிடம், வலுவான கோரிக்கைகளும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக தொடர்ச்சியாக வைக்கபப்ட்டு வருகிறது.
நோன்பு மாதத்தின் இறுதி 10 தினங்களை நெருங்கியுள்ள நிலையில், பாதுகாப்பாக இருந்திட பெற்றோர்களையும், இளைஞர்களையும் நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொள்கிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடந்திராமல் கண்காணித்திட - காவல்துறையையும், நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொள்கிறது.
இத்தருணத்தில், திருநெல்வேலியை சார்ந்த எழுத்தாளர், வழக்கறிஞர் எம்.எம்.தீன் அவர்கள், கடந்த ஆண்டு - நடப்பது என்ன? குழுமத்திற்காக பிரத்தியேகமாக எழுதிய - குருதியில் வழியும் பெருநாள்கள்! என்ற விழிப்புணர்வு சிறுகதையை - மறு வெளியீடு செய்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 15, 2017; 11:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|