காயல்பட்டினம் கடற்கரை புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகள் அப்புறப்படுத்தப்படும் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனுவிற்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் பதிலளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரமாக ("அண்ணா நகர்", "சிங்கித்துறை", "கொம்புத்துறை") உள்ள புறம்போக்கு நிலங்களில், CRZ விதிமுறைகளை மீறி குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் விரிவான மனுவை - திங்களன்று (மே 29, 2017) மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது.
அம்மனுவை மேல் நடவடிக்கைக்காக – மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு அனுப்பிவைத்தார். தற்போது - அம்மனு மீது, திருச்செந்தூர் கோட்டாட்சியரிடமிருந்து பதில் பெறப்பட்டுள்ளது.
அதில் - காயல்பட்டினம் கடற்கரையோரம் அமைந்துள்ள குடிசைகள், சர்வே ஆகாத கடற்கரை புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது என்றும், மேற்படி அக்குடிசைகளை அகற்றி, நகராட்சி மூலம் வேறு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
=================
திருச்செந்தூர் கோட்டாட்சியரின் பதில் முழுமையாக
=================
திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டணம் தென்பாகம் கிராமம் உள்ள குடிசைகளை அகற்ற கோரிய மனு மீது நடவடிக்கை மேற்கொண்டதில் மேற்படி கிராமத்தில் கடற்கரை புறம்போக்கு பகுதியில் உள்ள மக்கள் குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகிறார்கள். மேற்படி குடிசைகள் சர்வே ஆகாத கடற்கரை புறம் போக்கு நிலத்தில் அமைந்துள்ளது. மேற்படி குடிசைகளை அகற்றி அங்குள்ள மக்களுக்கு காயல்பட்டணம் நகராட்சி மூலம் வீடுகட்டி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 3, 2017; 11:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|