காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுளள் குருசடிக்கு அணுகுசாலைப் பணிகளை நிறுத்தவும், வெளியூர் படகுகள் காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து வெளியேறவும் உத்தவிட்டுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம், பூங்காவிற்கு வடக்கே - சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு அணுகு சாலை அமைப்பது குறித்து காயல்பட்டினம் நகராட்சி உட்பட பல்வேறு துறைகளிடம் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து - மீன்வளத்துறை - சாலைப்பணிகளை பாதியில் நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருந்தது.
காயல்பட்டினம் நகராட்சி மூலமும் நேற்று - இப்பணிகளை உடனடியாக கைவிட கடிதம் அனுப்பியிருப்பதாகவும், எந்த அடிப்படையில் கட்டுமானங்கள் நடைபெற்றது என்று விளக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையர் - நடப்பது என்ன? குழுமத்திடம் இன்று தெரிவித்தார்.
மேலும் - காயல்பட்டினம் கடற்கரையோரம், புதிதாக படகுகள் - வெளியூரில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமான புகார், மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கொடுக்கப்பட்டிருந்தது. அம்மனுவை - மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு - நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தார்.
அந்த படகுகளையும், காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து உடனடியாக எடுத்து செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும், ஆணையர் இன்று நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 31, 2017; 5:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|