உணவுப் பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பொருட்கள் தரம் பற்றி புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரால் வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி உணவு வர்க்கத்தில் ஈடுபட்டுள்ள சிறிய பெரிய வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி உணவகங்கள், டீக்கடைகள்;, உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்கள் பதிவு அல்லது உhpமம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தி வருகிறது.
கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் 94440 42322 என்ற செல் எண்ணில் புகார் செய்வதற்கு உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள போன் எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள் மாவட்ட நியமன அலுவலரின் மேற்பார்வையின்படி அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் மாவட்ட நியமன அலுவலரால் தொகுக்கப்பட்டு மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross