தமிழக அரசு அறிவிப்பின் படி, காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில், இலவச கல்விக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு, குலுக்கல் முறையில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த - அப்பள்ளியின் செய்தியறிக்கை:-
எமது சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 31-05-2017. (புதன்கிழமை) அன்று RTE 25% இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி இடஒதுக்கீடு நடைபெற்றது.
இணையதளம் மூலம் 33 மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். RTE 25% இலவச இடஒதுக்கீட்டை - அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக அதிகாரி எப்பிபனி தேவகிருபை, கிராம நிர்வாக அதிகாரி ஃப்ரான்ஸிஸ் பாரதி, சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோரால் – பெற்றோர் முன்னிலையில் நடத்தப்பட்டு, சேர்க்கைக்குரிய மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|