காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள குருசடி விவகாரம் தொடர்பாக, அரசுத் துறைகளிடமிருந்து “நடப்பது என்ன?” குழுமம் பெற்ற பதில்கள் அக்குழுமத்தால் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ள குருசடியை அப்புறப்படுத்துவது தொடர்பாக கடந்த மார்ச் முதல் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - தொடர்பான மத்திய மற்றும் மாநில அனைத்து அரசுத் துறைகளுக்கும் தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி வருகிறது.
அம்மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், இதுவரை பெறப்பட்டுள்ள ஆவணங்கள் வாயிலாக கீழே விளக்கப்பட்டுள்ளது:-
(1) CRZ விதிமுறைகளை மீறி குருசடி அமைந்துள்ளதால், அது தொடர்பான மனு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அம்மனு மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில அளவில் CRZ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக் அரசின் TAMILNADU STATE COASTAL ZONE MANAGEMENT AUTHORITY (TNSCZMA) அமைப்பை, மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு கேட்டுக்கொண்டு எழுதிய கடிதம்:-
(2) சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் குருசடி கட்டுமானங்கள் குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலருக்கு அனுப்பப்பட்ட மனு, உரிய நடவடிக்கைக்காக தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு - நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்ட கடிதம்:-
(3) சுற்றுச்சூழல் துறை விதிமுறைகளை மீறி நடைபெறும் குருசடி கட்டுமானங்கள் குறித்து சுற்றுச்சூழல் துறைக்கு நேரடியாக அனுப்பப்பட்ட புகாரும், உள்துறை அனுப்பி வைத்த புகாரும் - மாநில அளவில் CRZ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள தமிழக அரசின் TAMILNADU STATE COASTAL ZONE MANAGEMENT AUTHORITY (TNSCZMA) அமைப்பின் உறுப்பினர் - செயலராக, சுற்றுச்சூழல் துறை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்:-
(4) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருக்கு குருசடி தொடர்பாக அனுப்பிவைக்கப்பட்ட புகார் - அவ்வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்:-
(5) குருசடி தொடர்பாக பெறப்பட்ட புகார் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருப்பின் - 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் அரசு விளக்கக் கடிதங்களில் தெரிவித்துள்ள படி நடவடிக்கை எடுக்க - CRZ விதிமுறைகளை மாவட்ட அளவில் அமல்படுத்தும் குழுவின் அழைப்பாளரான மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு – சுற்றுச்சூழல் துறை இயக்குநர் எழுதிய கடிதம்:-
(6) சட்டத்திற்குப் புறம்பாக அமைந்துள்ள குருசடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி - மாவட்ட ஆட்சியரால், திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:-
(7) மாவட்ட ஆட்சியர் மூலம் குருசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெறப்பட்ட மனு மீது விசாரணை நடத்த ஆத்தூர் வருவாய் ஆய்வாளருக்கு, வட்டாட்சியர் எழுதிய கடிதம்:-
(8) சட்டத்திற்குப் புறம்பாக அமைந்துள்ள குருசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும், DTCP அமைப்பின் துணை இயக்குநருக்கும் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எழுதிய கடிதம்:-
(9) சட்டத்திற்குப் புறம்பாக அமைந்துள்ள குருசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதம்:-
(10) விதிமுறைகளை மீறி, அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள குருசடி மீது நடவடிக்கை தொடர்ந்தால் - சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிய மேல் நடவடிக்கைக்காக திருச்செந்தூர் கோட்டாட்சியருக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எழுதிய கடிதம்:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 2, 2017; 3:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|