காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் – தஃவா சென்டரில் பயிலும் மாணவ-மாணவியருக்கு, நிகழும் ரமழான் ஸஹர் – நோன்பு நோற்பு, இஃப்தார் – நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காக, அனுசரணைகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்நிறுவனத்தின் செய்தியறிக்கை:-
புதிதாக இஸ்லாமைத் தழுவிய தஃவா சென்டர் மாணவ-மாணவியரின் ஸஹர், இஃப்தார். செலவினங்களுக்கான அனுசரணை வேண்டி
அன்புச் சகோதர, சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்குமு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய உள்ளம் கொண்டவர்களாகவும் சந்திக்கட்டுமாக!
இஸ்லாம் மார்க்கத்தை புதிதாக தம் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டுள்ள மாணவ-மாணவியருக்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைப் போதிப்பதற்காகவும், தமிழ் பேசும் மக்களிடையே இஸ்லாமிய மார்க்கச் செய்திகளை எடுத்துரைக்கும் நோக்குடனும் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பாக, நடப்பாண்டு ரமழான் மாத நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் செலவினங்களுக்கான அனுசரணை எதிர்பார்க்கப்படுகின்ற்து.
நமது காயல்பட்டினம் தஃவா சென்டர் சார்பாக, இங்கு இஸ்லாமிய அடிப்படைக் கல்வி பயிலும் - புதிதாக இஸ்லாமைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுவதும் அவர்கள் மனதை மகிழ்விக்கும் வகையில் நோன்பு நோற்பு - ஸஹர், நோன்பு துறப்பு - இஃப்தார் ஏற்பாடுகள், சிரமங்களுக்கிடையிலும் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்...
தம் வாழ்விலேயே இப்போதுதான் அவர்கள் புதிதாக நோன்பு நோற்கப் பழகுகின்றனர். அப்பேர்பட்டவர்களுக்கு, சிறிதளவேனும் ஆர்வமூட்டும் வகையில் ஸஹர் - இஃப்தார் ஏற்பாடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமென நாங்கள் வழமை போல ஆவலுறுகிறோம்.
தற்சமயம் ஆண்கள் – 44 பேர் & பெண்கள்- 40 பேரும் படித்துவருகின்றார்கள். அந்த வகையில்,
ஒருநாள் ஸஹர் –
நோன்பு நோற்பு வகைக்காக ரூ4500/- தொகையும்,
ஒருநாள் இஃப்தார் –
நோன்பு துறப்பு வகைக்காக ரூ. 4500/-தொகையும்
செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இவ்வகைக்காக அனுசரணைத் தொகை பொதுமக்களாகிய உங்களிடமிருந்து அன்போடு எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இஸ்லாமைத் தழுவிய இம்மாணவர்களுக்காக செய்யப்படும் இதுபோன்ற நற்காரியங்களில் நிச்சயம் உங்கள் பங்களிப்பும் சிறிதளவேனும் இருக்க வேண்டுமென நாடுகிறோம்.
எனவே, இச்செய்தியைப் படிக்கும் சகோதர-சகோதரியர், தயவுகூர்ந்து குறைந்தபட்சம் ஒருநாள் செலவையும், அதிகபட்சமாக உங்கள் விருப்பப்படியும் தாராளமாக அனுசரணையளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாண்டு ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களுக்குமான செலவினங்களுக்கு மட்டுமே இந்த நன்கொடை சேகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தேவை முழுமையாகப் பூர்த்தியானால், அத்துடன் சேகரிப்பு நிறுத்தப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ், இந்த புதிய சகோதர-சகோதரியருக்குச் செய்யும் இதுபோன்ற நற்காரியங்களுக்கு பலனாக, நமது குடும்பத்தினரை தூய்மையான இஸ்லாமிய உணர்வுகளுடன் இறுதி வரை வாழச் செய்தருள்வானாக...
மேற்படி வகைக்காக அனுசரணையளிக்க விரும்புவோர், பின்வருமாறு பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு உங்கள் அனுசரணையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள்:
ஆண்கள்:
சகோதரர். உமர் - 98421 77609,
சகோதரர். ஆதில் - 74491 96345
பெண்கள்:
சகோதரி. ஆஸியா - +91 97881 31041
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|