தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக N.வெங்கடேஷ் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தை சார்ந்த N.வெங்கடேஷ், 2009 ஆம் ஆண்டு IAS பணியில் இணைந்தார்.
2013 ஆம் ஆண்டு முதல் நிதித்துறையில் துணை செயலராக இருந்த இவர், அக்டோபர் மாதம் ஓய்வுபெறவுள்ள M.ரவிக்குமார் IAS க்கு பதிலாக மாவட்ட ஆட்சியராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
M.ரவிக்குமார் IAS - SURVEY AND SETTLEMENT துறைக்கான இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. Re:...தமிழ்நாட்டின் சாபக் கேடு posted bymackie noohuthambi (kayalpatnam )[30 May 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45587
தமிழ் நாட்டில் ஒரு தமிழன் முதல்வராக வர முடியவில்லை ஒரு தமிழன் தலைமை செயலாளராக வர முடியவில்லை ஒரு தமிழன் மாநில ஆளுநராக வர முடியவில்லை. ஒரு தமிழன் மாவட்ட ஆட்சி தலைவராக வர முடியவில்லை அல்லது அந்த பதவியில் தொடர்ந்து இருந்து நல்ல பணிகள் செய்ய முடியவில்லை.
வெளி நாடுகளில் தமிழனுக்குள்ள மதிப்பு மரியாதை உள் நாட்டில் இல்லை.GOOGLE CEO சுந்தர் பிச்சை ஒரு தமிழன் என்பதில் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் தமிழில் முன்னெடுத்து செய்ய முடியவில்லை. NEET தேர்வு கூட தமிழனால் தேர்வு செய்ய முடியவில்லை. அதைவிடுங்கள் தமிழன் விரும்பும் இறைச்சியை கூட மத்திய அரசைக் கேட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்ற இழி நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டுளானே கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் கர்நாடகாவிலும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் கூட அதை அமுல் நடத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சபதம் எடுத்துள்ள நிலையில் தமிழ் நாட்டின் சார்பாக கேடு இந்த மாநில முதலமைச்சர் வாய் பேசா மௌனியாக இருக்கிறார்.
ஜெயலலிதா அவர்களை என்னதான் குறை சொன்னாலும் மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவர் மரணம் அடைந்ததும் அவரது இந்த குரலும் ஒடுங்கி விட்டது என்பது மிக வேதனையான செய்தி.
IAS படிப்பு படிக்க வேண்டும் என்று நமதூர் மக்களை எல்லோரும் கேட்டுக் கொள்கிறார்கள் அதற்கான பொருளாதார உதவிகள் செய்வதாகவும் சொல்கிறார்கள் ஆனால் யாரும் முன்னுக்கு வராத காரணங்களில் இதுவும் ஒன்று. நேர்மையான அதிகாரிகளுக்கு இங்கு மதிப்பு இல்லை சிறப்பு இல்லை. ஒரு முஸ்லீம் என்றால் இன்னும் மோசம்.
3 வருடத்துக்கு ஒரு முறை பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு மனைவி மக்களுடன் அவர்கள் சொல்லும் தண்ணீர் இல்லாத காட்டுக்கு போகவேண்டும். தங்கள் மக்களின் படிப்புக்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் மொழி பிரச்சினையில் சிக்கி தவிக்க வேண்டும் இதை எல்லாம் நமது இளைய தலைமுறையினர் சிந்தித்துப் பார்த்துதான் அதற்கு தங்கள் ஒப்புதலை தர மறுக்கிறார்கள் என்பதை சமூக ஆர்வலர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த நாட்டு ஆட்சியாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஆட்சி தலைவர்களும் சிறப்பாக செயல்படலாம்.
மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross