காயல்பட்டினம் கடற்கரையில், சிதைக்கப்பட்டுள்ள HTL (உயரலைக் கோடு) அடையாளக் கல்லை சீரமைக்க, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - உயர் அலை எல்லையை (HIGH TIDE LINE) உணர்த்துவதற்காக – குறிப்பிட்ட இடைவெளியுடன் பல இடங்களில் அடையாளக் கல் (HTL MARKER) பொருத்தப்பட்டுள்ளது.
[படங்கள்: கோப்பு.]
காயல்பட்டினம் கடற்கரையோரம் CRZ விதிமுறைகளை மீறி - சட்டவிரோதமாக அமைந்துள்ள குருசடிக்கு அருகில் உள்ள HTL அடையாள கல் - சிதைந்து காணப்படுகிறது.
இக்கல்லை சீரமைத்து, அதற்குரிய இடத்தில் பொருத்திட – ‘நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர், தமிழக அரசின் தலைமை செயலர், மாநில சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், மாநில கடலோரப் பகுதிகள் மேலாண்மை அமைப்பின் செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், அதன் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 24, 2017; 3:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|