மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் உடைய மனைவி - கொச்சியார் தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.சித்தி கதீஜா, இன்று 00:50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகளும்,
மர்ஹூம் முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மருமகளாரும்,
மரைக்கார் பள்ளி இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் உடைய மனைவியும்,
மர்ஹூம் சாமு ஷிஹாபுத்தீன் ஆலிம், குருவித்துறைப் பள்ளியின் துணைத் தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் ஆகியோரின் சகோதரர் மகளும்,
மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்க் அலீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூசுஃப் ஸாஹிப் சாபு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரி மகளும்,
ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரியும்,
எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் உடைய தாயாரும்,
மன்னர் பாதுல் அஸ்ஹப் உடைய மாமியாரும்,
நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத், அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் - முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் நூஹ், கே.எம்.ஸாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் மச்சியும்,
எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே., ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ், பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் பி.எஸ்.முஹம்மத் அல்அமீன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் சாலிஹ், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல் ஆகியோரின் மாமியும்,
ஹாஃபிழ் பி .ஏ.மன்னர் செய்யித் அப்துர் ரஹ்மான், பி.ஏ.முஹம்மத் சாலிஹ் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,
ஹாஃபிழ் எம்.ஐ.முத்து செய்யித் அஹ்மத், எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் டூட்டி ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (29.05.2017. திங்கட்கிழமை) 23:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |