இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு என்றும், 28.05.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நிகழாண்டின் ரமழான் முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற – ஜாவியா, மஹ்ழரா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
ஹிஜ்ரீ 1438 ரமழான் துவக்கம் தொடர்பான - காயல்பட்டினம் ஜாவியா - மஹ்ழரா & நகர உலமாக்களின் கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (26.05.2017. வெள்ளிக்கிழமை) 19.00 மணிக்கு, ஜாவியா அரபிக் கல்லூரி வளாகத்தில்,
அதன் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையில், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ முதல்வருமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ ஃபைஜீ மஹ்ழரீ, பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ரமழான் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல் பெறப்படாததால், இன்று ஷஃபான் 30ஆம் நாள் இரவு என்றும், 28.05.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நிகழாண்டின் ரமழான் முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும் கூட்டத்தின் நிறைவில் தீர்மானிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் செய்யப்பட்டது.
|