காயல்பட்டினம் ஹிஜ்ரீ கமிட்டி சார்பில், எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, “ரமழானை வரவேற்போம்!” எனும் தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சிகள், 19.05.2017. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
“சத்தியத்திற்கே சான்று பகர்வோம்” எனும் தலைப்பில் கோவை மஸ்ஊத், “ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ரா, மஃரிபா?” எனும் தலைப்பில் முஹம்மத் மீரான் தாவூதீ, “ஒன்றுபட்டு ரமழானைத் தொடங்குவோம்” எனும் தலைப்பில் அஹ்மத் முஹ்யித்தீன் உஸ்மானீ, “இஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம்” எனும் தலைப்பில் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், நோன்பு கால ஆரோக்கிய உணவுகள் குறித்த தகவல்களும் பகிரப்பட்டன. பொதுமக்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு இதன்போது பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, காயல்பட்டினம் ஹிஜ்ரீ கமிட்டி செய்திருந்தது.
தகவல் & படங்கள்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
|