காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு அணுகுசாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்திட – தொடர்புடைய அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மனு அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக குருசடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உருவான பிரச்சனை குறித்து - கடந்த மார்ச் மாதம், சமாதானக் கூட்டமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து - கோட்டாட்சியர் மூலம் 12 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறிருக்க, அமைதியைக் குலைக்கும் வகையில் - மேற்படி குருசடி கட்டுமானத்திற்கு அணுகுசாலை அமைக்கும் பணி, சட்டவிரோதமாக தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் ஆகியோருக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*
[பதிவு: மே 24, 2017; 7:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|