எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களைக் கொண்ட உணவுப் பொதி – காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பால் வினியோகிக்கப்படவுள்ளது. இதற்கான அனுசரணையாளர்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் தகவலறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
"தொழுகையை நிலை நாட்டுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; ருகூவு செய்வோருடன் நீங்களும் ருகூவு செய்யுங்கள் "(2.43)
"யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (2:274)
" யார் ஒரு நோன் பாளி நோன்பு திறக்க உதவி செய்கி றாரோ அவருக்கு, அந்த நோன்பாளிக்கு ரிய அதே அளவு நன்மைகள் கிடைக்கும். அந்த நோன்பாளியின் நன்மைகளில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது." (அஹ்மத், திர்மிதி)
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டி மையம்(KCGC) பல ஆண்டுகளாக தொடர்ந்து இறைவனுக்காக, உதவிகள் தேவைப்படுவோரின் நிலைமை அறிந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே,
இவ்வருடம் 2017, புனித ரமாலானில் ஏழை எளியவர்கள் நோன்பு நோற்க உதவும் வகையில் அவர்கள் குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்களை காயல்பட்டணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,600 (ரூபாய் ஆயிரத்து அறுநூறு) மதிப்பிலான ரமலான் உணவுப் பொருட்கள்.
உங்களில் ஒருவர் தங்களின் வசதிக்கேற்ப எத்தனை குடும்பத்தினருக்கு வேண்டுமானாலும் உணவு பொருட்களை தர்மம் செய்யலாம். (ஜகாத் மற்றும் ஷதக்கா பணத்தினை இதற்கு கொடுக்கலாம்).
உணவுப்பொருகள்:-
*அரிசி. -15 கிலோ
*கோதுமை - 2 கிலோ
*ரவை. -1 கிலோ
*பட்டாணி மாவு. - 1/2 கிலோ
*சமையல் எண்ணை - 2 லிட்டர்
*துவரம் பருப்பு. -1 கிலோ
*பாசிப் பருப்பு. - 1 கிலோ
*சக்கரை. -1 கிலோ
*உப்பு. -1 கிலோ
*பேரீச்சம் பழம். - 1/4 கிலோ
*சேமியா. - 3 பாக்கட்
*மசாலா தூள் - 1/4 கிலோ
*கடுகு. -50 கிராம்
*சீரகம். -50 கிராம்
*சோம்பு. -50 கிராம்
*டீ தூள். -100 கிராம்
*புளி. -250 கிராம்
*கரம் மசாலா. -50 கிராம்
*பொட்டுக்கடலை. -100 கிராம்
*இஞ்சி பேஸ்ட். - 100 கிராம்
*பெருங்காயம். - 30 கிராம்.
*அப்பளம். -100 கிராம்.
உங்கள் பங்களிப்பினை செலுத்த கடைசி தேதி: ஜீன் 10 , 2017 (சனிக்கிழமை).
தொடர்புக்கு,
சகோ.ஸ்மார்ட் காதர் ( 9715605323 )
சகோ.S.K.ஷமீமுல் இஸ்லாம் ( 9791117765 )
சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ் ( 9382808007 )
சகோ.குளம் முஹம்மது தம்பி ( 9840184838 )
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|