வி-யுனைட்டெட் KPL 2017ஆம் ஆண்டின் கால்பந்து சுற்றுப் போட்டிக்கான ARR கோப்பையை, Kayal Chelsea அணி வென்றுள்ளது. இதுகுறித்து V United வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் We Are United By Sports என்ற முழக்கத்தோடு செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 9 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 8 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வருடத்திற்கான கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் Kid & Mom, Knight Riders, Sulthan Warriors, Yousuf United, HK indians, 5Sky Sporting, Star Hunters மற்றும் Kayal Super Kings ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
இச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு Knight Riders அணியும், Kid & Mom அணியும் தகுதி பெற்றன. இப்போட்டி 19ஆம் தேதி மாலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த Knight Riders அணி 111 ரன்களை பெற்றார்கள். தொடர்ந்து பேட்டிங் செய்த Kid & Mom அணியினர்கள் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை நழுவவிட்டார்கள்.
இறுதியில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக கோமான் யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ஜனாப். கைசாலி மரைக்கார் அவர்கள் கலந்துகொண்டார்கள். விழாவின் துவக்கமாக சகோ. புஹாரி இறைமறை வசனத்தை ஓதினார். சகோ. M.ஜஹாங்கிர் வரவேற்புரையையும், அறிமுகவுரையையும் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பரிசளிப்புவிழா நடைபெற்றது.
பரிசளிப்புவிழாவின் துவக்கமாக நடுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, பின்னர் வெற்றிக்கு முனைந்த அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகளையும், ரூ.12000 ரொக்கப்பரிசினையும் மற்றும் சுழற்கோப்பையையும் ஹாஜியார் A.K. முஹம்மது மெய்தீன் அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசுகளையும், ரூ.17000 ரொக்கப்பரிசினையும் மற்றும் சுழற்கோப்பையையும் சிறப்பு விருந்தினர் KUSC மைதானத்தின் தலைவர் ஜனாப். கைசாலி மரைக்கார் அவர்கள் வழங்கினார்கள்.
போட்டித் தொடரின் சிறந்த மட்டையாளராக Knight Riders அணியின் யாஸர், சிறந்த பந்துவீச்சாளராக Kayal Super Kings அணியின் ரஸாக் மற்றும் போட்டித்தொடரின் சிறந்த ஆல்ரவுண்டரான Kid & Mom அணியின் அஸாருத்தீன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் நாட்டுப்பண்ணுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வுகளை சகோ. M.ஜஹாங்கிர் தொகுத்து வழங்கினார்.
இப்போட்டித் தொடர் சிறப்பாக நடத்திமுடிக்க உதவியா எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிகளை நடத்த மைதானம் தந்துதவிய KSC & KUSC மைதானத்தின் நிர்வாகிகளுக்கும், வீரர்கள் தந்துதவிய நகரின் அனைத்து மைதானங்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய வீரர்களுக்கும், அணிகள் தந்துதவிய உரிமையாளர்கள் ஜனாப். தோல்சாப்பு மீராசாஹிபு (Kid & Mom), ஜனாப். உதுமான் (Kayal Super Kings), ஜனாப். ஃபஹ்மி (5Sky Sporting), ஜனாப். S.H. மொகுதூம் (Star Hunters), ஜனாப். இஸ்மாயில் (Sulthan Warriors), ஜனாப். ஸஃபீக் (Yousuf United), ஜனாப். ஷியா (HK indians) மற்றும் ஜனாப். இப்றாஹீம் (Knight Riders) ஆகியோர்களுக்கும், எங்களின் முக்கிய அணுசரனையாளராக விளங்கிய தூத்துக்குடி முத்தம்மால் காலனியில் அமைந்துள்ள ARR HOSPITAL நிர்வாகிகள் ஜனாப். ரஃபீக் மற்றும் ஜனாப். அபூபக்கர் ஆகியோர்களுக்கும், அணிகளின் பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களுக்கும், போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடன் இணையதளங்களில் வெளியிட்ட ஊடகங்களின் நிர்வாகிகளுக்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெற களப்பணியில் உதவிய நண்பர்களுக்கும், ஏணையவிடுபட்ட அனைவர்களுக்கும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
|