காயல்பட்டினம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் RUMBLE STRIPS வேகத்தடைகள் அமைக்கப்படும் என – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனுவிற்கு, நெடுஞ்சாலைத் துறை பதில் அளித்துள்ளது.. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக அமைந்துள்ள - நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையில், தாயிம்பள்ளி அருகே கூடுதலாக ஒரு வேகத்தடை; பேருந்து நிலையம் அருகில் ஒரு வேகத்தடை என இரு இடங்களில் வேகத்தடை அமைக்க - நெடுஞ்சாலைத்துறையிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
அம்மனுவிற்கு - முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலமாக பதில் வழங்கியுள்ள நெடுஞ்சாலைத்துறை, இரண்டு பகுதிகளிலும் RUMBLE STRIPS முறையிலான வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
----------------------
நெடுசாலைத்துறையின் பதில்
----------------------
மனுதாரர் குறிப்பிட்டுள்ள சாலை பகுதியானது தூத்துக்குடி (நெ) க(ம)ப கோட்டத்தில் திருச்செந்தூர் (நெ) க(ம)ப உட்கோட்ட பராமரிப்பில் உள்ள தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலை கி.மீ. 31/0, 32/2ஆகும். இச்சாலைப்பகுதியில் RUMBLE STRIPS அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 18. 2017; 10:15 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|