வி-யுனைட்டெட் KPL 2017ஆம் ஆண்டின் கால்பந்து சுற்றுப் போட்டிக்கான ARR கோப்பையை, Kayal Chelsea அணி வென்றுள்ளது. இதுகுறித்து V United வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் செயல்பட்டுவரும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, காயல்பட்டணத்தின் இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதற்காகவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 9 ஆண்டுகளாக கால்பந்து போட்டிகளையும், 8 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் வல்ல இறைவனின் துணையுடனும், நமதூர் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், வீரர்களின் ஒத்துழைப்புடனும் நடத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வருடத்திற்கான கால்பந்து போட்டிகள் இம்மாதம் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் V2000, Knight Riders, Canton Thunders, Kayal Chelsea, Bangkok Ball Blaster, 5Sky Sporting, Kayal Express மற்றும் Janseva ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
இச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு Knight Riders அணியும், Kayal Chelsea அணியும் தகுதி பெற்றன. இப்போட்டி 11ஆம் தேதி மாலை நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் Knight Riders அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
முன்னதாக முதல்பாதி ஆட்டத்தின் இடையில் இறுதிப்போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவருமான திரு. ஜேஷய்யா வில்லவராயன் அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களையும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் Kayal Chelsea அணி 1 கோல் அடித்து சமநிலைபெற்றது. பின்னர் ஆட்டநேர இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமநிலை முறிவு முறையில் Kayal Chelsea அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இறுதியில் நடைபெற்ற பரிசளிப்புவிழாவின் துவக்கமாக சகோ. இம்ரான் இறைமறை வசனத்தை ஓதினார். சகோ. M.M.சாஹூல்ஹமீது வரவேற்புரையையும், அறிமுகவுரையையும் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவருமான திரு. ஜேஷய்யா வில்லவராயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பரிசளிப்புவிழாவின் துவக்கமாக நடுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, பின்னர் 15 வயதுக்குற்பட்ட சிறுவர்களுக்கான நடத்தப்பட்ட V-United Juniors கால்பந்து போட்டியில் பங்கேற்க வாய்ப்புகிடைக்காத இளம் வீரர்களுக்காக நடத்தப்பட்ட மர்ஹூம் ஹாஜி V.M.S லெப்பை நினைவு போட்டியில் வெற்றிபெற்ற, வெற்றிக்கு முனைந்த மற்றும் பங்கேற்ற அணியின் வீரர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
15 வயதுக்குற்பட்ட சிறுவர்களுக்கான நடத்தப்பட்ட V-United Juniors கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற Muhyideen Rainers அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசு, ரூ.9000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றிக்கு முனைந்த Soccer Smashers அணியின் வீரர்களுக்கு தனிநபர் பரிசு, ரூ.7000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது.
V-United Juniors கால்பந்து போட்டித் தொடரின் சிறந்த கோல் கீப்பராக Soccer Smashers அணியின் Noohu Afeef, சிறந்த தடுப்பாட்ட வீரராக Muhyideen Rainers அணியின் Mufeez, சிறந்த நடுக்கள வீரராக Hameed Stars அணியின் Musthaq, சிறந்த முன்கள வீரராக Kayal Manchester அணியின் Mohudoom Naina மற்றும் போட்டித் தொடரின் சிறந்த வீரராக Muhyideen Rainers அணியின் Muthu Mohudoom ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் வெற்றிக்கு முனைந்த Knight Riders அணியினருக்கு தனிநபர் பரிசுகளையும், ரூ.15000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையையும் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற Kayal Chelsea அணியினருக்கு தனிநபர் பரிசுகளையும், ரூ.20000 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையையும் சிறப்பு விருந்தினர் அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவருமான திரு. ஜேஷய்யா வில்லவராயன் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக Kayal Chelsea அணியின் அப்துல்லாஹ், போட்டித்தொடரின் சிறந்த கோல் கீப்பர் Knight Riders அணியின் காழி அலாவுத்தீன், சிறந்த தடுப்பாட்டவீரர் Kayal Chelsea அணியின் ஃபிரான்ஸிஸ், நடுக்கள வீரர் 5Sky Sporting அணியின் அஹமது, சிறந்த முன்களவீரர் Kayal Express அணியின் ஹனீஃபா, போட்டித் தொடரின் சிறந்த வீரர் Kayal Chelsea அணியின் ரிஸ்னி, போட்டித் தொடரின் மூத்தவீரர் BBB அணியின் இப்றாஹீம் போட்டித் தொடரின் வளரும்இளம் வீரராக Kayal Express அணியின் அப்பாஸ் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இறுதியாக நன்றியுரைக்குப்பின் நாட்டுப்பண்ணுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வுகளை சகோ. M.M.சாஹூல்ஹமீது தொகுத்து வழங்கினார்.
இப்போட்டித் தொடர் சிறப்பாக நடத்திமுடிக்க உதவியா எல்லாம்வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். போட்டிகளை நடத்த மைதானம் தந்துதவிய USC மைதானத்தின் நிர்வாகிகளுக்கும், வீரர்கள் தந்துதவிய நகரின் அனைத்து மைதானங்களுக்கும், ஒத்துழைப்புநல்கிய வீரர்களுக்கும், அணிகள் தந்துதவிய உரிமையாளர்கள் ஜனாப். இப்றாஹீம் (Bangkok Ball Blaster), ஜனாப். முத்துஇப்றாஹீம் (Kayal Express), ஜனாப். ஃபஹ்மி (5Sky Sporting), ஜனாப். முஜாஹித்அலி (Janseva), ஜனாப். ரஃபீக் ஹாஜி (Kayal Chelsea), ஜனாப். அஸார் (Canton Thunders), ஜனாப். செய்யது அஹமது (V2000) மற்றும் ஜனாப். அலாவுத்தீன் (Knight Riders) ஆகியோர்களுக்கும், எங்களின் முக்கிய அணுசரனையாளராக விளங்கிய தூத்துக்குடி முத்தம்மால் காலனியில் அமைந்துள்ள ARR HOSPITAL நிர்வாகிகள் ஜனாப். ரஃபீக் மற்றும் ஜனாப். அபூபக்கர் ஆகியோர்களுக்கும், அணிகளின் பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்களுக்கும், போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடன் இணையதளங்களில் வெளியிட்ட ஊடகங்களின் நிர்வாகிகளுக்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெற களப்பணியில் உதவிய நண்பர்களுக்கும், ஏணையவிடுபட்ட அனைவர்களுக்கும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |