மே 27 சனிக்கிழமையன்று – ஹிஜ்ரீ 1438ஆம் ஆண்டின் ரமழான் முதல் நாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது. இன்று (மே 26) இஷா தொழுகைக்குப் பின், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ அறிவித்ததன் சுருக்கம் வருமாறு:-
3 அடிப்படைகளில் நோன்போ, பெருநாளோ முடிவு செய்யப்படும்.
(1) அந்தந்தப் பகுதிகளில் தலைப்பிறை பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(2) உலகின் எப்பகுதியிலாவது தலைப்பிறை பார்க்கப்பட்ட உறுதியான தகவல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
(3) மேற்படி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனில், மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில், நம் சுற்றுவட்டாரத்தில் பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பிறை பார்க்கப்பட்ட தகவலும் பெறப்படவில்லை. அவ்வாறு – உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் பெறப்பட்டால் மே 26 வெள்ளிக்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொள்ளலாம். தகவல் கிடைக்கப்பெறவில்லையெனில், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாப் பூர்த்தி செய்து, மே 27 சனிக்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பின் படி, தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் எங்கிருந்தும் பெறப்படாததால், மே 27 சனிக்கிழமையன்று ரமழான் முதல் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ளது. |