காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு மின் இணைப்பு வழங்கியமை குறித்த – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் புகாரையடுத்து, தூத்துக்குடி மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள குருசடிக்கு, மின் வாரியத் துறையின் விதிமுறைகளையும் மீறி – கடந்த 2012ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் துண்டிக்கக் கோரி, “நடப்பது என்ன? ” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அப்புகார் மீதான விசாரணை மே 11 அன்று, தூத்துக்குடியில் நடந்தது. அதன் இறுதியில் வெளியிடப்பட்ட ஆணை தற்போது அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது:-
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன?” சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 25, 2017; 7:00 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|