காயல்பட்டினத்தில் கித்மத் சேவா மையம் என்ற பெயரில் அமைப்பை நிறுவி, தனி நபராக தன்னாலியன்ற பொதுநலப் பணிகளைச் செய்த – நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.என்.முஹம்மத் அபூபக்கர் பக்ரீன் என்ற பக்ரீன் ஹாஜியார், இன்று 09.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82. அன்னார்,
மர்ஹூம் அ.க.முஹ்யித்தீன் நத்தர் ஸாஹிப் அவர்களின் மகனும்,
மர்ஹூம் சர்வேஜி முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மமினாக்கார் ஹாஜி) அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் எம்.என்.ஹுஸைன் ஹல்லாஜ் அவர்களின் சகோதரரும்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மம்மினாகார் உடைய (தொடர்பு எண்: +91 84890 98927) தந்தையும்,
எஸ்.எம்.ஏ.ஹஸன் என்பவரது மச்சானும்,
யு.எம்.மீரா ஸாஹிப், ஏ.கே.யாஸீன் ஆகியோரின் மாமனாரும்,
எம்.எம்.முஹம்மத் யஹ்யா உவைஸ், எம்.எம்.முஹம்மத் அபூபக்கர் பக்ரீன் ஹில்மீ, எம்.ஏ.சி.முஹம்மத் அபூபக்கர் பக்ரீன், எம்.எம்.முஹம்மத் ரஹ்மீ, எம்.ஏ.சி.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (26.05.2017. வெள்ளிக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னார், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இயங்கி வரும் மஹ்பூப் ஸுப்ஹானீ சங்கத்தின் முன்னாள் செயலாளராவார். மேலும், கடந்த 1980களில் இயங்கிய ஸதக்கத்துல்லாஹ் அப்பா பேரவை எனும் அமைப்பின் பொருளாளராக இருந்து, காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் அமிலக் கழிவை வெளியேற்றும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கெதிராகப் போராடிய முதலாமவர்களுள் ஒருவர் என்பதும், இது தொடர்பாக இன்று களப்பணியாற்றும் பலருக்கும் முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
|