ஐக்கிய அரபு அமீரகம் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில், ஜூன் 02 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க – அதன் அங்கத்தினருக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமுஅலைக்கும்.
கடந்த 19.05.2017 அன்று நடை பெற்ற அமீரக அஜ்ஹர் ஜமாத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி அமீரக அஜ்ஹர் ஜமாத்தின் இந்த வருட இப்தார் விருந்து அழைப்பு இன்ஷா அல்லாஹ் வரும் 02.06.2017 வெள்ளிக்கிழமை அன்று ஜமாத்தின் தலைவர் ஜனாப் தாவூத் ஹாஜி அவர்க்ளின் இல்லத்தில் நடை பெற உள்ளது.
அவ்வமயம் காயல்பட்டணம் இஸ்லாமிய கல்வி மையத்தின் இஸ்லாமிய அழைப்பாளர் ஜனாப் ஜக்கரியா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுகைக்கு பின் சுமார் 4.30 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அபுதாபியில் இருந்து வரும் உறுப்பினர்கள் சகோதரர்கள் மகபூல் அஹ்மத் (050 690 4600) ஜனாப் இஸ்மாயில் (050 293 378) ஆகியோர்களை தொடர்பு கொள்ளுமாறும், துபாயில் இருந்து வ்ரும் சகோதரர்கள் சகோதரர்கள் பிர்தவுஸ் (052 649 1992) இர்பான் (052 814 4312) முஹம்மது யூனுஸ் (055 750 1471) ஆகியோர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross