சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் ஊடகக் குழு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 60-வது செயற்குழு கூட்டம் ஹாபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் சகோ ஹைதர் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (19-May) சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்திற்கு பார்வையாளராக Dr. இப்ராஹிம் சகோ. தாவூத் , உமர் , சதக்கத்துல்லாஹ் , மொகுதும் நெய்னா மற்றும் அப்துல் காதர் அவர்கள் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் ஆரம்பமாக மதிய உணவோடு பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் சூபி வாசித்த பின் இறைமறை ஓதி ஹாபிழ் S.A.C. ஸாலிஹ் அவர்கள் தொடக்கி வைத்தார். அதன் பின் வந்தோரை சகோ முஹம்மது லெப்பை அவர்கள் வரவேற்றார்.
கூட்ட தலைவர் உரை
இறை பொருத்தத்தை மட்டுமே நாடி நாம் செய்கின்ற அனைத்து நற்காரியங்களை இறைவன் ஏற்று கொள்ளுவனாக என்ற பிராத்தனையோடு, நம்முடைய உதவிகளை முதலில் நம் குடும்பத்தில் இருந்து துவங்கி நம் அக்கம், பக்கம் , நம் தெரு என்ற அளவில் கவனித்து மிகுதியானவரை உதவிகள் கேட்டு கடிதங்கள் வெளியில் போகாதவாறு நாமே தீர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
மேலும் உலக காயல் நலமன்றங்கள் நம்முடைய ஊருக்கு தங்களுடைய மிகுதியான பங்களிப்பு செய்து வருவதற்கு நன்றி தெரிவித்து , இருந்த போதும் நாம் எதிர்பாத்த முன்னேற்ற இலக்கை அடையவில்லை என்ற எதார்த்தத்தை உணர்ந்து அனைத்து உலக காயல் நலமன்றங்கள் இணைத்து நம் ஊரின் ஏழ்மை நிலையை போக்கி அவரவர் தேவைகளை அவர்களே நீக்கி கொள்ளுவதற்கு தோதுவாக சிறுதொழில் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
நிதி உதவிகள்: (ரூ. 2,62,500/
ஊரிலிருந்து உதவி கேட்டு வந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு மொத்தம் 21 கடிதங்களுக்கு ரூ. 2,42,500 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் I.A.S படிப்பிற்காக இக்ரா வில் இருந்து பெறப்பட்ட கடிதத்திற்கு ரூ. 20,000/ வும், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெறப்பட்ட கடிதங்களுக்கு இக்கூட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவிகளின் சாரம்சத்தை சகோதரர் சூபி அவர்கள் வாசித்தார்.
ரமலான் உணவு பொருள் வழங்கும் திட்டம்
கடந்த 5 வருடங்களை போன்று இவ்வருடமும் புனித ரமலான் மாதத்தில் ஏழை நோன்பாளிகளுக்கு நோன்பு நோற்பதற்கும் , திறப்பதற்கும் தேவையான உணவு பொருட்களை வழங்குவது என்று முடிவு செய்ததின் அடிப்படையில் 221 குடும்பங்களுக்கு ரமலானுக்கு 3 தினங்களுக்கு முன் பொருட்கள் வழங்க எம்மன்ற காயல் பிரதிநிதி மூலம் எற்பாடு செய்யப்பட்டுள்ள விவரத்தை அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட சகோ சூபி மற்றும் சகோ இஸ்மத் அவர்கள் எடுத்துரைத்தார்கள் . சிறப்பாக ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கு எம்மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
திட்டக்குழு
வரும் காலங்களில் நம்மன்றம் செய்யவேண்டிய புதிய திட்டங்களை பற்றி முழுவதும் ஆராய்ந்து மன்ற செயற்குழுவுக்கு தெரிவிப்பதற்க்காக மன்ற தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட திட்டக்குழு அமைக்கப்பட்டது.
54 வது பொதுக்குழு
எம் மன்றத்தின் 54 வது பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் வருகின்ற புனித ரமலான் மாதம் ஜூன் 2 வெள்ளிகிழமையன்று இஃப்தார் நிகழ்ச்சியுடன் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் வைத்தது நடைபெற உள்ளது . இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும் வருகை தருவதோடு புதிதாக வந்துள்ள நம் காயல் சொந்தங்களையும் அழைத்து வரும்படி கேட்டுக்கொன்கின்றோம்
திருமண வாழ்த்து
எம்மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ ஷாதுலி அவர்களின் புதல்வியின் திருமணம் வருகிற 30.07.2017 மற்றும் மன்ற உறுப்பினர் சகோ மொகுதும் நெய்னா அவர்களுக்கு வருகின்ற 08.07.2017 அன்று நடைபெற இருக்கின்ற திருமண வைபகத்துக்கு எம்மன்றம் சார்பாக வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடைய இல்லற வாழ்வு சிறக்க பிராத்தனை செய்யப்பட்டது
பார்வையாளர் உரை
நடைபெற்ற கூட்டம் சம்பந்தமாக பார்வையாளராக கலந்து கொண்ட அனைவரும் பொதுவான கருத்துக்காக, முதலாவதாக தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி , நம்மன்றம் நல்ல பல திட்டங்களை செய்வது அறிந்து மிக்க மகிழ்வதாகவும், அதே சமயம் பெரும் பங்களிப்பு மருத்துவத்திருக்காக செய்யப்படுவதை கருத்தில் கொண்டு , ஷீபா மூலம் நம்மூர் மக்களுக்கு அரசின் மருத்துவ காப்பிட்டு திட்டம் பற்றி விழிப்புணர்வு செய்து முழமையாக அரசு காப்பீட்டினை பயன்படுத்த வழிவகை செய்யும் பட்சத்தில், நம்முடைய பங்களிப்பை மருத்துவம் தவிர்த்து கல்வி , மற்றும் சிறுதொழில் சம்பத்ந்தமாக செய்யலாம் என்று தெரிவித்தனர்.
DR. இப்ராஹிம் அவர்கள் தமது உரையில் பாரா மெடிக்கல் சம்பந்தமான துறையை தெரிவு செய்து படிக்கும் பெண்களுக்கு நம்மன்றம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இக்கூட்ட ஒருங்கினைப்பாளர்கலான சகோதரர்கள் ஹைதர் , தாவூத் இத்ரீஸ் K.S.M. அப்துல் காதிர் மற்றும் சகோ . சூபி ஆகியோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர் .
இறுதியாக சகோ S.L. சதக் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக இடவசதி செய்து தந்த சகோ தாவூத் இத்ரீஸ் மற்றும் அனுசரனையாலர்க்கும் நன்றி நவில, சகோதரர் ஹாபிழ் ஹாபிழ் சதக் ஷமீல் துஆவோடு, குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|