Re:...சகோதர பாசம்....நெகிழ வைக்கிறது posted bymackie noohuthambi (kayalpatnam )[12 June 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45601
அல்லாஹ் இந்த புனித ரமலானில் மறைந்த இந்த சகோதரிகளுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. இருவரின் குடும்பத்தாருக்குக்கும் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவென்றால் சகோதரிகள் இருவரும் எவ்வளவு பாசத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதுதான். பாசங்கள் நேசங்கள் அருகி வரும் இந்த காலத்தில் அடுத்த வீட்டு துயரங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது கதைகளில்தான் இப்படி படித்திருக்கிறோம் ஆனால் இது கதையல்ல நிஜம் என்பது நமதூரிலேயே நிதர்சனமாக தெரிய வந்திருக்கிறது.
ஒவ்வொரு இளைய சகோதரியும் மூத்த பெண்ணுக்கு அல்லது மூத்த பையனுக்கு தாய் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது இவர்கள் விஷயத்தில் எவ்வளவு உண்மை.
யா அல்லாஹ் இப்படி நேசமும் பாசமும் மிக்க சகோதரிகளாக எங்களது எல்லாக் குடும்பத்தில் உள்ள பெண்களும் திகழ இந்த ரமளானின் பொருட்டால் நீ அருள்புரிவாயாக. எங்கள் சகோதரிகள் எங்களுக்கு தாய் போல் இருந்து எங்களுக்கு கண்குளிர்ச்சியையும் உள்ளத்தில் நிம்மதியையும் தந்து ஒருவருக்கொருவர் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளை அவர்களுக்குள்ளே மன்னித்து சகோதர பாசத்தை எல்லோரும் உணர்ந்து செயல்பட தௌபீக் செய்வாயாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross