Re:...சிறு துள்ளி பெரும் வெள்ளம் posted bymackie noohuthambi (kayalpatnam )[18 June 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45608
மிக சிறிய அளவில் துவங்கிய இந்த ஏழைமக்களுக்கு உதவும் நிகழ்ச்சி இன்று 900 மக்களுக்கு பயன்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.
மேடை அலங்காரங்கள் இல்லாமல் படாடோபமான பதாதைகளை இல்லாமல் மிக எளிய முறையில் நடந்த இந்த நிகழ்ச்சி பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் கொஞ்சம் சொகுசாகவே இந்த நிகழ்ச்சி நடந்தது ஊரில் சில மக்களை முகம் சுளிக்க வைத்தது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனாலும் அது அரசு அங்கீகாரம் பெற இன்றியமையாததாக இருந்தது என்பதால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
''நாம் பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும் போதும் இன்பம்'' என்று ஒரு கவிஞன் பாடியது எவ்வளவு உண்மை என்பதை இந்த நலத்திட்டத்தில் பயனடைந்த ஏழை மக்களின் முக மலர்ச்சி அதற்கு மௌன சாட்சி பகர்கிறது.
ஒரு பேரீச்சம் பழத்தின் சுளையை தர்மம் செய்தாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பதும் தர்மம் உங்களை நோய் நொடிகளை விட்டும் பாதுகாக்கும் உங்கள் விதியை கூட அது மாற்றும் வல்லமை படைத்தது என்ற நபிகள் நாயகம் அவர்கள் பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது.
இந்த நல்ல காரியத்தை செய்வதற்கு முயற்சி செய்தவர்கள் அதற்காக பரிந்துரை செய்தவர்கள் உடல் உழைப்பை நல்கியவர்கள் பொருளாதாரத்தை வழங்கியவர்கள் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது அருளை சொரிந்தருள்புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross