செய்தி: நோன்புப் பெருநாள் 1438: இன்று பெருநாள் இரவு! நாளை (ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை) பெருநாள்!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சர்வதேச பிறை எனும் மாயை posted bymackie noohuthambi (kayalpatnam )[24 June 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45620
ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஒரு தவறான முன்னுதாரணத்தை மக்கள் மத்தியில் பரவ விட்டிருக்கிறார்கள்.
சர்வதேச பிறை என்பதை ஒப்புக் கொண்டால் நமதூர் நேரப்படி மாலை 4 மணிக்கே சிங்கப்பூரில் பிறை கண்ட செய்தி தெரிந்து விட்டது. இரவு 8 மணி வரை காத்திருக்க வேண்டியதில்லை. பட்கல் என்ற ஊரில் பிறை காணப் பட்டது என்றால் அது சர்வதேச பிறை அல்ல நமது நாட்டில் எங்கு கண்டாலும் அது தலைப் பிறைதான் என்ற வாதம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
உலமாக்கள் பிடிவாதங்களை விட்டு விட்டு அல்லாஹ்வுக்காக அவனது ரஸூலின் சொல்படி செயல்படுவது என்ற நல்லெண்ணத்துடன் இக்ஹ்லாசுடன் செயல்பட நினைத்தால் உடனடியாக காயல்பட்டினம் உலமாக்கள் சபை என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி செய்யுங்கள்.
நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு நபி தோழர் வந்து நீங்கள் ஓதுவது போல் இவர் ஓதவில்லை என்று இன்னொரு தோழரை பற்றி குறை கூறியபோது அந்த தோழரை நபிகள் நாயகம் கண்டித்தார்கள் அவர் ஓதுவது சரிதான். சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள் என்று கண்டித்ததாக ஒரு ஹதீது படித்தேன். இது உண்மை என்றால் நமது உலமாக்கள் ஏன் இப்படி பிரிந்து நிற்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நபிகள் நாயகம் தனது கையை உள்ளத்தின் பக்கம் நீட்டி தக்வா இங்கே இருக்கிறது என்று சொன்னார்கள்.
உலமாக்களின் பிடிவாதத்தால் அவாம்களாகிய நாங்கள் பிரிந்து நிற்கிறோம்...மறுமையில் உங்களுக்கு இரண்டு பங்கு நன்மை வேண்டுமா இரண்டு பங்கு வேதனை வேண்டுமா என்பதை நீங்களே யோசித்து நல்ல முடிவுக்கு வாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross