செய்தி: ரமழான் 1438: தூ-டி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி! சட்டமன்ற உறுப்பினர் அனிதா சிறப்பு விருந்தினர்!! கட்சியினர், காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மகிழ்ச்சி + எழுச்சி =அண்ணாச்சி posted bymackie noohuthambi (kayalpatnam )[28 June 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45636
CHANCE COMES BUT ONCE .MAKE . HAY WHILE SUN SHINES
இப்படி ஆங்கிலத்தில் பழ மொழிகள் பல உண்டு . அண்ணாச்சி அவர்கள் இந்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்ச்சியை அப்படி ஒரு வாய்ப்பாக தனக்கு ஒரு சாதகமான நிகழ்வாக மாற்றிக் காட்டி இருக்கிறார்.
அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் பாசறைக்குள் தன்னை மீண்டும் இணைத்து பட்டை தீட்டிக் கொண்டு முன்னிலையில் வந்து நிற்கிறார். வாழ்த்துக்கள்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக கழகத்தின் செயல் தலைவராக நியமனம் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம். அதிமுகவின் அஸ்தமனம் கண்ணில் நிதர்சனமாக தெரிந்து கொண்டிருக்கும் எழுச்சி மிக்க நிகழ்வுகள் மறு புறம். இவற்றை நன்றாக புரிந்து கொண்டு காய் நகர்த்தி இருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு அதுவும் காயல்பட்டினம் மக்களுக்கு எப்போதுமே கலைஞர் மீது ஒரு பாசம். அதைபோல் கலைஞரை தக்க சமயத்தில் காப்பாற்றிய குல்லாய் வேட்டி மீது கலைஞருக்கு ஒரு நேசம். நான் மீண்டும் பிறந்தால் ஒரு இஸ்லாமிய தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று கலைஞர் சொல்லும்போதெல்லாம் நமது தாய்மார்கள் அவர்கள் வயிற்றை தடவிப் பார்த்து பெருமைப் பட்டுக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. இடையில் ஏற்பட்ட சில துயரங்களால் அந்த நேசம் சிலருக்கு கசப்பாகவும் மாறியது. ஆனாலும் தங்கத்தில் கீறல் விழுந்தால் மீண்டும் அதை உருக்கி சுத்த தங்கமாக்கி பழைய நிலைக்கு கொண்டு வந்து விடலாம் என்ற கலைஞரின் அன்பான அணுகுமுறை மீண்டும் அவரிடம் காயல்பட்டினம் மக்கள் பாசத்தை கொட்ட வழி வகுத்தது.
திரு அனிதா ராதா கிருஷ்ணன் ஒரு சராசரி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் காயல்பட்டினத்தில் நலத்திட்ட நாயகராக தன் பிம்பத்தை உயர்திக் கொண்டவர். சுப மங்கள வீட்டுக்கும் அமங்கல வீட்டுக்கும் அவர் அதிரடியாக வந்து கலந்து கொள்வார். அவர்கள் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வார். இப்படி தன்னை ஒரு காயல்பட்டினத்தின் மைந்தனாக தன்னை அடையாள படுத்திக்க கொண்டதால் அன்று ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்ச்சி களை காட்டியது. அவர் வாழ்க்கை பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் பெரும்பான்மையான வாக்குகளால் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆவார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. நாமும் இந்த நேரத்தில் அவரை வாழ்த்தி மத சார்பற்ற ஆட்சி இந்த தமிழகத்தில் மீண்டும் அமைந்து மத்திய அரசின் அடாவடி அரசியலை காவி சிந்தனைகளை வேரோடி பிடுங்கி எறியும் ஆட்சியாக மலரட்டும் என்று வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள் அண்ணாச்சி...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross