Re:...எண்ணத்தில் என்னடி மாற்றம் இது இப்பித்தார் நிகழ்ச்சி செய்த மாயம்... posted bymackie noohuthambi (kayalpatnam )[03 July 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45639
இஃப்த்தார் நிகழ்ச்சியை நடத்தி கச்சிதமாக காய் நகர்த்திய அண்ணாச்சி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எனது முந்தைய பதிவை பார்ப்பவர்களுக்கு தெரியும் நான் சொன்னது எத்தனை உண்மை என்று.
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் அரசியல் காற்றில் ஆட்சியும் பறக்கும் நொவ் THE BALL IS IN DMK'S COURT மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ''அம்மா அம்மா எங்கள் அம்மா அம்மா என்றால் அறிவு என்று கனல் காக்கும் பாடல்கள்'' பட்டி தொட்டியெல்லாம் வைரலாக வைரஸாக பரவி கலைஞரின் சிம்மாசனத்தையே சிம்ம சொப்பனமாக்கி காட்டியது ஒரு காலம்.
ஆனால் அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள தவறி விட்டார்கள் அதிமுக பொது செயலாளர் சசிகலா அவர்கள் - அம்மாவின் அன்பு சகோதரி . ''பாட்டும் நானே பாவமும் நானே'' என்று எல்லாமாக ஆக பார்த்த பார்வதி தேவியாக நினைத்ததுதான் வினையாக வந்து முடிந்ததது.''நான் சக்தியாக இருக்கிறேன் நீ சிவனாக இரு'' என்று பன்னீர் செல்வத்தை முதல்வராக தொடர்ந்து இருக்க விட்டிருந்தால் ''சக்தி இல்லையேல் சிவன் இல்லை'' என்று உரக்க சொல்லி இருக்கலாம். பன்னீர்செல்வம் இப்படி ருத்ரதாண்டவம் ஆடியும் இருக்க மாட்டார். என்ன செய்ய எல்லாம் ஈசனின் திருவிளையாடல்...
கலைஞர் அழகாக சொல்வார்.
தென்றலை தீண்டியதில்லை நான்
நெருப்பை தாண்டி இருக்கிறேன்...
இப்போது அனிதா காட்டில் '' மழை''
கலைஞர் வீட்டில் ''இலை''..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross