செய்தி: வழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய் பயன்பாடு: சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்சாரீயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்! – முதல்வர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...EASY FOR EPS posted bymackie noohuthambi (kayalpatnam )[08 July 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45661
பழனிசாமி அவர்களின் வேலையை ஈஸி ஆக்கிவிட்டார் தமீமுன் அன்ஸாரி.
வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு குழாய்களை அகற்ற வேண்டியதில்லை, 70 டெபாசில் அளவுக்கு ஓலி இருக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்ற தீர்ப்பு. அதையே வலியுறுத்தி பேசினார் அபூபக்கர். ஆனால் 6 மாத இடைவெளியில் அதை அகற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தமீமுன் அன்சாரி தென்காசி தீர்ப்புக்கு இணங்கி இருக்கிறார்.
முதல்வர் அவர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் ஆகி விட்டது அவரது பேச்சு. நிச்சயம் முதல்வர் அவர்கள் பரிசீலனை செய்து ஆறு மாத அவகாசம் கொடுத்து கூம்பு குழாய்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடுவார்.
வலுவிழந்து விட்டது நமது கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரின் வாதம். புயல் கரையை கடந்து விட்ட நிம்மதியை முதல்வருக்கு தந்திருக்கிறது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் வாதம்.
6 மாதம் வரை இந்த ஆட்சி நீடித்து இருக்குமா ........அதுவே கேள்விக்கு குறியாக இருக்கிறது.அதைத்தான் தமீமுன் அன்சாரி சூசகமாக சொல்லி இருக்கிறாரோ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross