தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கூம்புக் குழாய் பயன்பாடு தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்சாரீயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கோயில், பள்ளிவாசல், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் – நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்ஸாரீ சபாநாயகரிடம் கொடுத்திருந்தார். இதுகுறித்து முதல்வர், அமைச்சர்களிடம் பல விளக்கங்களையும் அவர் கூறியிருந்தார்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை 70 டெசிபல் அளவுக்கு பயன்படுத்துவது அல்லது 6 மாத கால அவகாசம் கொடுத்து ஸ்பீக்கர் பாக்ஸ் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது ஆகிய இரண்டில் ஒன்றையாவது பரீசீலிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூம்பு வடிவ ஒலிபெருக்கி தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்சாரீயின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என பதிலளித்தார்.
இத்தகவலை, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா தெரிவித்துள்ளார்.
|