| |
செய்தி எண் (ID #) 19416 | | | ஞாயிறு, ஜுலை 9, 2017 | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்புப் பணி! ஜூலை 09, 23 ஆகிய நாட்களில் வாக்குச் சாவடிகளிலேயே சேவையைப் பெறலாம்!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1762 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தூத்துக்குடி மாவட்டத்தில் - வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்புப் பணி நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 09, 23 ஆகிய நாட்களில், அவரவர் வாக்குச் சாவடிகளிலேயே சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2017-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பொருட்டு இவ்வாண்டு ஜுலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தச்சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது”என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-19 வயதுக் குழுமத்தைச் சேர்ந்த வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜுலை 31-ம் தேதி நிறைவுறும் இச்சிறப்புப்பணியின் போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.elections.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் அந்நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள்.
இச்சிறப்பு பணியின் போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து இச்சிறப்பு பணியின் போது நீக்கப்படும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது சம்பந்தமான தங்களது சந்தேகங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் வாக்காளர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 0461-2340099-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|