காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் முடங்கியுள்ள பணிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்த்திடுமாறு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி – YUF கோரியுள்ளது.
இது தொடர்பாக, அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, காயல்பட்டினம் நகரில் சீர் செய்யப்படாத சாலைகள், பொதுமக்கள் கட்டண கழிப்பிட வசதி முடக்கம், குடிநீர் வசதிகள் முடக்கம், வறுமைக் கோட்டுக்குக் கீழானோர் கணக்கெடுப்பு நடைபெறாதமை உள்ளிட்ட – இதுவரை நிறைவேற்றப்படாத பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்த்திட கேட்டுக்கொண்டுள்ளார்.
|