தொடர்ந்து விபத்துகள் நடைபெறக் காரணமாக இருக்கும் DCW ஆலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தும் என SDPI தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அக்கட்சியின் செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் 01/07/2017 சனிக்கிழமை அன்று காயல்பட்டணத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் :
1. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடிக்கு அருகிலும் இன்னும் மாவட்டத்திற்குட்பட்ட 6 இடங்களில் ONGC நிறுவனத்தால் மேற்கொள்ள முயற்ச்சி செய்யப்பட்ட எரிவாய்வுக்கான ஆரம்ப கட்ட சோதனைகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் செயல்வீரர்களை இந்த செயற்குழு வரவேற்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபோன்ற சோதனைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்த மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
2. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்திற்கு அருகேயுள்ள DCW ஆலையில் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடைபெற்றும் அரசு துறைகள் எந்தவித நடவடிக்கையும் அந்த ஆலையின் மீது எடுக்காமல் பொதுமக்களின் தொடர் போராட்டங்களையும் பாதுகாப்பற்ற சூழல்களை அலட்சியமாக கருதுவதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. விரைவில் DCW ஆலைக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநில தழுவிய போராட்டத்தை SDPI கட்சி எடுத்து செல்லும் என்று தெரிவித்துக் கொள்கிறது..
3. தூத்துக்குடி மாவட்டங்களில் பல மாதங்களாக நிலவிவரும் குடிநீருக்கான தட்டுப்பாடு குறித்த மாவட்ட ஆட்சி தலைவரின் தடை உத்தரவை கண்டுகொள்ளாமல் தனியார் ஆலைகளுக்கு முறைகேடாக லாரிகளில் தண்ணீர் எடுப்பதை SDPI கட்சியின் சார்பாக பலமுறை தடுத்து நிறுத்தியும் ஒரு சில சமூக விரோதிகள் முறைகேடாக நிலத்தடி நீரை எடுத்து செல்வதை அரசு துறைகள் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கல்வத் அஹ்மத் கபீர்,
செய்தி & ஊடகத்துறை பொறுப்பாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross