காயல்பட்டினம் கடற்கரையில் உள்ள கடைகளுக்கும், அங்கு வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என நகராட்சி ஆணையருக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி – YUF கோரியுள்ளது.
இது தொடர்பாக, அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் – காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
காயல்பட்டினம் கடற்கரையில் கடைகளுக்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஏலம் விடப்படவுள்ளதாக அறிந்துகொண்டதாகவும், கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பதால் சிறிய அளவில் முதலீடு செய்துள்ள வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,
ஏனைய ஊர்களில் இதுபோன்று கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், இங்கும் அதுபோன்று கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
|