வழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக, அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை, SDPI கட்சி நடத்தியுள்ளது. இதுகுறித்த அக்கட்சியின் செய்தியறிக்கை:-
வழிபாட்டு தளங்களில் ஒலி பெருக்கி அகற்ற காவல்துறை கெடுபிடி கொடுத்துவரும் நிலையில் #SDPI கட்சி மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சட்டவிழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தில் வைத்து 8-7-2017 அன்று 10.45 மணிக்கு நடைபெற்றது.
ஷஃபீக் முனீர் ஸதக்கீ கிராஅத் ஓதினார். SDPI தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் வி.எம்.எஸ்.முபாரக் கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களின் ஜமாத் நிர்வாகிகள் என நூற்று இருபதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
ஜமாஅத் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு, மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முஹம்மத் ஷாஜஹான் விளக்கமளித்தார்.
பள்ளிவாசல்களில் கூம்புக் குழாய்களை அகற்றிட வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்யும் கெடுபிடிகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும்,
உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள ஒலி அளவிலேயே பள்ளிவாசல்களின் கூம்புக் குழாய்கள் இருப்பதால் – அவற்றுக்குத் தடை விதிக்கக் கூடாது எனவும்,
கூம்புக் குழாய் பிரச்சினையைப் பயன்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நாசகார சக்திகளின் சதிவலையைக் காவல்துறை கண்டறிந்து, அதை முறியடிக்க வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து செய்திருந்தனர்..
தகவல்:
H.சம்சுதீன்
மாவட்ட பொதுச்செயளாலர்
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்
|