காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் அரசுப் பேருந்துகள் குறித்த – 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து, ஓர் ஆண்டுக்கும் மேலாக, நடப்பது என்ன? குழுமம் - பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஓர் பாகமாக - கடந்த ஜனவரி மாதம், பேருந்துகள் வருகை குறித்து 24 மணி நேர கண்காணிப்பு நடத்தி, அதன் அறிக்கையை - சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கியது.
இரண்டாவது - முறையாக, கடந்த மே மாத இறுதியில், மீண்டும் 24 மணி நேர கண்காணிப்பு, நடப்பது என்ன? குழும தன்னார்வலர்கள் துணைக்கொண்டு நடத்தப்பட்டது. அந்த கண்காணிப்பின் முடிவுகளை - போக்குவரத்துறையின் அரசு செயலர், நான்கு போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் நேரடியாக வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலியி) லிமிடெட் நிறுவனங்களின் - மேலாண்மை இயக்குனர்களிடம், கடந்த வாரம் நேரடியாக இவ்வறிக்கைகள் கொடுக்கப்பட்டது.
இன்று (ஜூலை 3) - தூத்துக்குடியில், மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேசன் IAS யிடம் இது சம்பந்தமான அறிக்கை, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - நேரடியாக வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூலை 3, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|